விவசாயிகளின் வாழ்வாதாரம் செழிக்க அ.தி.மு.க. அரசு பாடுபடும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

விவசாயிகளின் வாழ்வாதாரம் செழிக்க பாடுபடும் ஒரே அரசு .தி.மு.. அரசு தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூர் தனியார் மகாலில் கால்நடை பராமரிப்போருடன் முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.அப்போது கால்நடை வளர்ப்போரின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

மேலும் கோரிக்கை மனுக்களும் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியது. எனது தலைமையிலான அரசு வேளாண் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமானது குடிமராமத்து திட்டம்.

ஒரு சொட்டு நீரைக்கூட வீணாக்கக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு வறண்ட பகுதிக்கும் தண்ணீர் கிடைக்கும் வகையில் பல்வேறு கால்வாய்கள், குளங்கள் சீரமைக்கப்பட்டு உபரிநீர் குளங்களுக்கு செல்லும் வகையில் கால்வாய் வெட்டப்பட்டுள்ளது.

முக்கியமாக காவிரிகுண்டாறு திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகளுக்கு டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. இந்த நீர் மேலாண்மை திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காவிரிகுண்டாறு திட்டம் செயல்பாட்டிற்கு வரும்போது அதிகம் பயன்பெறும் மாவட்டமாக ராமநாதபுரம் திகழும்.

இங்கு காளை வளர்ப்பு பற்றி பலரும் தெரிவித்தனர். காளை வளர்ப்பு கடினமான தொழில். இதனை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை நமது அரசு செயல்படுத்தி வருகிறது. சேலம் மாவட்டம் தலைவாசலில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.

கலப்பின பசுவை உருவாக்குதல், அந்த பசுக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிப்பது மற்றும் அதிக பால் உற்பத்தி செய்ய என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு ஆராய்ச்சி நடத்தப்பட உள்ளது. நான் அமெரிக்காவிற்கு சென்றிருந்தபோது அங்கு கால்நடை பண்ணைக்கு சென்றேன்.

அங்குள்ள பசு ஒரு நாளைக்கு 65 லிட்டர் வரை பால் கொடுக்கும் அளவுக்கு உள்ளது. இதேபோல் தமிழகத்திலும் மாடுகளை வளர்ப்பது குறித்து சேலம் கால்நடை பூங்காவில் ஆய்வு செய்யப்படும். அனைத்து மாவட்ட விவசாயிகளையும் அழைத்து சென்று அவர்களுக்கு பயிற்சி அளிப்பது, நோய் சிகிச்சை குறித்து விளக்கம் போன்ற விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படும்.

இதேபோல் கலப்பின ஆடுகள் உருவாக்குவது குறித்தும் இந்த பூங்காவில் பணிகள் மேற்கொள்ளப்படும். மீன்வளர்ப்பு, கோழி வளர்ப்பு ஆகியவற்றுக்கும் மிகப்பெரிய ஆராய்ச்சி மையம் உருவாக்கப்படும். திண்டிவனம் அருகே மிகப்பெரிய உணவு பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.

இங்கு விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை குளிர்சாதன கிட்டங்கி வைத்து பயன்பெறலாம். இந்த திட்டங்கள் நிறைவேறும்போது விவசாயிகளுக்கு உற்பத்திக்கு தகுந்த விலை கிடைக்கும். இப்படி விவசாயிகளின் வாழ்வாதாரம் செழிக்க பாடுபடும் ஒரே அரசு .தி.மு.. அரசுதான்.

நான் பதவி ஏற்ற 3 ஆண்டு 10 மாதங்களில் வேளாண் மக்களுக்காகத்தான் அதிக திட்டங்களை தீட்டியுள்ளேன். நீர் மேலாண்மை திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தண்ணீர் எங்கெல்லாம் சேமிக்க வேண்டும் என அதிகாரிகள் மூலம் அறிக்கை பெற்று செயல்படுத்தி வருகிறோம்.

இதேபோல் கோதாவரிகாவிரி திட்டமும் விரைவில் நிறைவேறும். இதற்காக ஆந்திரா, தெலுங்கானா முதல்வர்களிடமும், மத்திய அரசிடமும் தொடர்ந்து பேசி வருகிறோம். சுமார் ரூ.75 ஆயிரம் கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் மிகப்பெரிய வரலாற்று சிறப்புமிக்க திட்டம். நானும் ஒரு விவசாயி. கால்நடை வளர்ப்பவன் என்பதால் வேளாண் பணிகள் குறித்து எனக்கு நன்கு தெரியும்.

எனது தாத்தா காலத்தில் இருந்து விவசாயம் செய்து வருகிறோம். எனவே இரவு பகல் பாராது உழைக்கும் விவசாயிகளுக்கு இந்த அரசு துணை நிற்கும். தொடர்ந்து அவர் பேசுகையில், இங்குள்ள மக்கள் யாதவர் கல்லூரி குறித்து தெரிவித்தனர். உங்களுக்குள் உள்ள பிரச்சினைகளால் தற்போது இதனை தெரிவித்துள்ளீர்கள். இந்த பிரச்சினை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அது முடிவடைந்த பிறகு சமுதாய மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றார்.

 

Translate »
error: Content is protected !!