வீட்டுக்கு ஒருவருக்கு வேலை கொடுக்கும் திட்டம் – அமமுக தேர்தல் அறிக்கை

ஓவைசி தமிழகத்தில் ரஜினிகாந்த் போல பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாக உள்ளார். எங்கள் கூட்டணி இயற்கையான கூட்டணி. எங்கள் கூட்டணியில் உயர்சாதி வகுப்பினரும் வேட்பாளர்களாக உள்ளனர். திமுகவை ஆட்சிக்கு வரவிடக் கூடாது என்பதே எங்களின் நோக்கம்: TTV தினகரன்

தமிழகமே கடனில் தள்ளாடிக்கொண்டு இருக்கிறது. ஒருத்தர் வீட்டு பெண்களுக்கு ஊதியம் கொடுப்போம் என்கிறார். ஒருவர் அதை பார்த்து ₹1,000 தருகிறோம் என்கிறார். எடப்பாடி பழனிச்சாமி ₹1,500 தருகிறோம் என்கிறார். பெண்களை கவர்கிறார்களாம்

எங்கள் தேர்தல் அறிக்கையில் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்கும் ”அம்மா பொருளாதார புரட்சித் திட்டம்” என்கிற திட்டத்தை குறிப்பிட்டுள்ளோம். இளைஞர்கள் உள்ளூரிலேயே வேலைவாய்ப்பை பெறும் வகையில் இத்திட்டம் இருக்கும்

40 வயது வரையிலான ஆண்களுக்கு டூ வீலர் வழங்க மாணியம். தமிழர் பண்பாட்டு திருவிழாவாக ஜல்லிக்கட்டு நடத்தப்படும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும். இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு 5%-ஆக உயர்த்த நடவடிக்கை

வி.வி.ஐ.பிக்கள் பயணிக்கும் போது, சாலைகளில் பெண் காவலர்கள் நிறுத்தப்பட மாட்டார்கள்.

பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். தண்டனை காலம் முடிந்து சிறையில் உள்ள இஸ்லாமியர்கள் விடுவிக்கப்படுவார்கள். மாவட்டந்தோறும் பத்திரிக்கையாளர்களுக்கு வீடு கட்டித்தரப்படும்.

Translate »
error: Content is protected !!