வெறுப்பின் உச்சத்தில் இருக்கிறாரா? சசிகலாவின் திடீர் முடிவு …! ஜெயலலிதாவும் இப்படிதான் செல்வாராம்…

சென்னை,

என்னவெல்லாம் நினைத்து சென்னையில் கால் வைத்தாரோ தெரியவில்லை. அதில் ஒன்றுகூட நடக்காமல் உச்சக்கட்ட வெறுப்பிற்கே சசிகலா சென்றுவிட்டார் போலும். இப்போது திடீரென இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது அவரது ஆதரவாளர்களிடையே பெரும் பரபரப்பை கிளப்பி விட்டு வருகிறது.

பாஜகவை பொறுத்தவரை, ஆரம்பத்திலிருந்தே சசிகலா, தினகரனை தனித்தனியாகவே பார்த்தனர். சசிகலா அரசியலில் ஈடுபடுவதையோ, மறுபடியும் அதிமுகவுக்குள் வருவதையோ பாஜக பெரிதாக விரும்பவில்லை.

ஜெயில் தண்டனை பெற்ற ஒருவர் மறுபடியும் அரசியலில் ஈடுபட்டால், அதை மக்கள் விரும்ப மாட்டார்கள் என்பதையும் அறியாமல் இல்லை. இன்னொரு பக்கம், எடப்பாடியாரின் பிடிவாததும் சேர்ந்து கொள்ளவும்தான், உச்சக்கட்டமாக அரசியலில் இருந்து விலகி இருப்பதாக சசிகலா அறிக்கை வெளியிட நேர்ந்ததாக கூறப்படுகிறது.

இது அதிமுக, பாஜகவுக்கு எந்த அளவுக்கு ஷாக் தந்ததோ தெரியவில்லை, ஆனால் டிடிவி தினகரன் நொறுங்கி போய்விட்டார். இப்படி ஒரு அறிக்கையை சசிகலா வெளியிட போகிறார் என்று கேள்விப்பட்டதுமே, அடுத்த செகண்ட் அவரை சந்திக்கவும் சென்றுள்ளார். அவசரப்பட வேண்டாம், பொறுமையாக இருக்கும்படி தினகரன் சொல்லியும், அதை சசிகலா ஏற்கவில்லை என்று தெரிகிறது.

அதேசமயம், சசிகலாவின் இப்படி ஒரு அறிவிப்புக்கு பின்னால் பாஜக இருப்பதாகவும் சொல்லப்பட்டு வருகிறது. இதற்கு காரணம், பாஜக எப்போதுமே தேர்தலுக்கு பிந்தைய அரசியலில்தான் தன் முழு கவனத்தை செலுத்தும் என்பதால்தான்.

அந்த வகையில், தேர்தல் முடிந்த பிறகு, சசிகலாவை கட்சிக்குள் கொண்டு வந்து அல்லது அமமுகவை இணைத்து வேறு மாதிரியான காய் நகர்த்தலை பாஜக கையில் எடுக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். அதனால், இந்த நிமிஷம் வரை சசிகலாவின் முடிவு ஒரு சஸ்பென்ஸ்தான்.

எனினும், அறிக்கை வெளியிட்ட பிறகு சசிகலாவிடம் இருந்து ஒரு சத்தத்தையும் காணோம். கட்சி தலைவர்கள் என்ன நினைக்கிறார்கள், மற்ற அரசியல் நிகழ்வுகள் எப்படி உள்ளன என்பது குறித்து அவர் தினந்தோறும் கவனிக்காமல் இல்லை. அனைத்தையும் உன்னிப்பாக உற்று நோக்கி கொண்டுதான் இருக்கிறாராம். தனக்கு நெருக்கமானவர்களிடமும் நாள்தோறும் நிகழும் சூழல்களையும் விசாரித்தபடியேதான் உள்ளாராம்.

இப்படிப்பட்ட சூழலில்தான் சசிகலா திடீரென கோயில் கோயிலாக போக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திடீரென ஆன்மீக பயணம் மேற்கொள்ள என்ன காரணம் என்று தெரியவில்லை. வரும் 11ம் தேதி, சிவராத்திரி வருகிறது. அன்றைய தினம் இரவு, சென்னை தி.நகரில் உள்ள அகத்தியர் கோவிலுக்கு சென்று சுவாமி கும்பிட போகிறாராம். பிறகு, 15ம் தேதி முதல், தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கு சென்று வழிபடவும் திட்டமிட்டுள்ளாராம்.

சசிகலா சென்னை வந்த அடுத்த சில நாட்களில் வேறு ஒரு தகவல் வந்தது. தன்னுடைய சொந்தக்காரர்களை எல்லாம் சந்திக்க தஞ்சாவூர் போக போகிறார், ஆதரவாளர்களை மன்னார்குடியில் வைத்து சந்தித்து ஆலோசனை நடத்த போகிறார், கணவர் நடராஜன் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்த போகிறார் என்றெல்லாம் செய்திகள் பரபரத்தன.

ஆனால், இதில் ஒன்றுகூட நடக்கவே இல்லை. இன்னும் சொல்லப்போனால், சென்னையைவிட்டு சசிகலா நகரவே இல்லை. அந்த அளவுக்கு வெறுப்பின் உச்சத்தில் இருக்கிறாரா? அதனால்தான் இப்படி கோயில் கோயிலாக செல்ல போகிறாரா என்றும் தெரியவில்லை. அடிப்படையிலேயே நிறைய பக்தி உடையவர் சசிகலா.

ஜெயலலிதா எல்லா விசேஷங்களுக்கும் கோயிலுக்கு கிளம்பி சென்றுவிடுவார். முக்கிய பூஜைகளை உடனடியாக நடத்தி விடுவார். சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபடுவார். அப்படி அத்தனை நிகழ்வுகளிலும் பங்கேற்றவர் சசிகலா. அந்த நிகழ்வுகளை எல்லாம் ஜெயலலிதாவுக்காக முன்கூட்டியே தயார் செய்தவர் சசிகலா. சென்னை தி.நகர் வீட்டுக்கு வந்த அன்றைக்குகூட சிறப்பு பூஜைகள் அந்த வீட்டில் நடந்ததாக சொல்லப்பட்டது. தை நினைத்து அந்த ஸ்பெஷல் பூஜைகளையும், பிரார்த்தனைகளையும், அவர் செய்தாரோ தெரியவில்லை. இப்போது தமிழகம் கோயில்களுக்கு செல்ல முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது

 

Translate »
error: Content is protected !!