வேலையின்மை, வறுமை, பணவீக்கத்தை மட்டுமே அரசு உயர்த்தியுள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நாட்டில் வேலையின்மை, வறுமை, பணவீக்கம் ஆகியவற்றை மட்டுமே மத்திய அரசு உயர்த்தியுள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கொரோனா பெருந்தொற்று சூழலை மத்திய அரசு சரியாக கையாளவில்லை என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார்.
அதேபோல், ஊரடங்கு அமல்படுத்தியது தொடர்பாகவும் மத்தியில் ஆளும் மோடி அரசை கடுமையாக சாடி வருகிறார். இந்த நிலையில், ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- மத்தியில் ஆளும் இந்த அரசு எதை உயர்த்தியுள்ளது.
வேலையின்மை, பணவீக்கம், வறுமை, தன்னுடைய பணக்கார நண்பர்களின் வருமானத்தை மட்டுமே உயர்த்தியுள்ளது‘எனத் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பொருளாதாரம் குறித்த சில விவரங்களையும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.