வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை

சட்டங்களை திரும்பப்பெறும் கோரிக்கையை தவிர விவசாயிகளின் வேறு எந்த வேண்டுகோளையும் பரிசீலிக்க  அரசு தயார் – தயார்நரேந்திர சிங் தோமர். 

இந்த சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்ற விவசாயிகளின் பிரதான கோரிக்கை தொடர்பாக தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், இந்த பேச்சுவார்த்தை நாடு முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் பஞ்சாப்பை சேர்ந்த நானாசாகர் குருத்வாரா தலைவர் பாபா லக்கா நேற்று டெல்லியில் வேளாண் மந்திரி தோமரை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தோமரிடம், பாலா லக்காவுடன் ஏதாவது பரிந்துரை குறித்து அரசு சார்பில் விவாதிக்கப்பட்டதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் கூறுகையில், பாபா லக்காவுடன் அடிக்கடி பேசி வருகிறேன். இன்று அவர் டெல்லி வந்ததால் அது செய்தி ஆகியிருக்கிறதுஅவருடன் எனக்கு பழைய தொடர்பு நீடிக்கிறது. அவரிடம் எந்த பரிந்துரை குறித்தும் அரசு விவாதிக்கவில்லை.

சட்டங்களை திரும்பப்பெறும் கோரிக்கையை தவிர விவசாயிகளின் வேறு எந்த வேண்டுகோளையும் பரிசீலிக்க தயார் என அரசு கூறியிருக்கிறதுஎன்று தெரிவித்தார். இன்றைய பேச்சுவார்த்தையில் என்ன முடிவு எட்டப்படும்? என்ற கேள்விக்கு, அதுகுறித்து தற்போது எதுவும் கூற முடியாது எனவும், பேச்சுவார்த்தையில் எந்த விஷயங்கள் விவாதிக்கப்படுகிறது என்பதை பொறுத்தே அது அமையும் எனவும் அவர் கூறினார்.

 

Translate »
error: Content is protected !!