வேளாண் சட்டத்தை நீக்கக்கோரி மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

பரமக்குடி,

பரமக்குடியில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள கருப்பு வேளாண்மை சட்டத்தை கண்டித்து, நகர காங்கிரஸ் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுமேலும் போராட்டத்தில்  உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியில்நகர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள கருப்பு வேளாண்மை சட்டத்திற்கு எதிரான எதிராக சட்டத்தை வாபஸ் பெறக் கோரியும் நகர காங்கிரஸ் கட்சியின் தலைவர் அப்துல் அஜீஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் ஆலம், மாநில செயலாளர் ஆனந்தகுமார் ,மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .சிறப்பு அழைப்பாளராக  மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா கலந்துகொண்டு, மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண்மை சட்டங்களால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு  சட்டத்துக்கு எதிராக போராடி உயிர் நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி சோ.பா.ரெங்கநாதன்,மாவட்ட இளைஞரணி தலைவர் சரவணன் காந்தி எஸ்சி எஸ்டி மாவட்ட தலைவர் ராஜசேகர், நகர காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கண்ணன் ஷேக் அப்துல்லா ராஜாமுகமது, ,ராஜீவ்காந்தி சொசைட்டி தலைவர் நாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நகர் மாணவரணி தலைவர் அஜீத் நன்றி கூறினார்.. படவிளக்கம் பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியில் வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடி டெல்லியில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது

Translate »
error: Content is protected !!