10.5% வன்னியர் இடஒதுக்கீடு தாற்காலிகமானதுதான்; அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு..
10.5% வன்னியர் இடஒதுக்கீடு தாற்காலிகமானதுதான்; அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம் என மதுரை திருமங்கலத்தில் வாக்கு சேகரித்தபோது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு மாற்றி அமைக்கப்படும்.
வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் எதிர்ப்பை சமாளிக்க அமைச்சர் விளக்கமளித்துள்ளார். 10.5% இடஒதுக்கீடு குறித்த அமைச்சர் உதயகுமாரின் பேச்சால் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.