மாநிலங்கள் வசம் 12.84 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்படாமல் உள்ளது
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 158 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா 2வது அலைக்கு பின், தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்க அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, மத்திய அரசு தடுப்பூசிகளை கொள்முதல் செய்து விநியோகித்து வருகிறது. அந்தவகையில் தற்போது வரை மாநிலங்களுக்கு 158 கோடியே 46 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் 146 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ள நிலையில், மாநிலங்கள் கைவசம் 12 புள்ளி 84 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்படாமல் இருப்பு உள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.