இந்தியாவில் நேற்று 14,313… இன்று புதிதாக 15,823 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 15,823 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 40 லட்சத்து 01 ஆயிரத்து 743 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 22,844 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடி 33 லட்சத்து 42 ஆயிரத்து 901 ஆக உயர்ந்துள்ளது.

இருப்பினும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தாக்குதலில் 226 பேர் உயிரிழந்தனர். இதனால் , இந்தியாவில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 4 லட்சம் 51 ஆயிரம் 189 ஆக உயர்ந்துள்ளது.

Translate »
error: Content is protected !!