புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,471 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 337 ஆக அதிகரித்துள்ளது. தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 1,884 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இதுவரை 1 லட்சத்து 27 ஆயிரத்து 795 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 5,658 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளிலும் வீட்டிலும் சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.