17.35 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளனர்

உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், அங்கிருந்து மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். போலந்து, ஹங்கேரி, ருமேனியா, சுலோவாக்கியா ஆகிய நாடுகளின் எல்லைகளில் ஏராளமானோர் குவிந்துள்ளனர். உக்ரைனில் கடந்த 24-ம் தேதி போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 17 லட்சத்து 35 ஆயிரம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக ஐ.நா. அகதிகள் முகமை தெரிவித்துள்ளது. உக்ரைனில் இருந்து போலந்து நாட்டிற்கு அதிகளவில் மக்கள் சென்றுள்ளனர். சுமார் 10 லட்சத்து 30 ஆயிரம் பேர் போலந்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போர் முடிவுக்கு வராமல் தொடருவதால், அகதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!