18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச தடுப்பூசி – உ.பி. அரசு அறிவிப்பு

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச தடுப்பூசி செலுத்தப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சனிக்கிழமை தெரிவித்தார்.

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளது. கடந்த 28-ம் தேதி முதல் முன்பதிவு தொடங்கிய நிலையில், இதுவரை 2.45 கோடிக்கும் அதிகமானவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர்,

18-44 வயதுக்குள்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசிகளை வழங்க முடிவு செய்துள்ளோம். 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்திய அரசு இலவச தடுப்பூசி வழங்கப்படுகிறது. மேலும், உத்தரப் பிரதேசத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட லக்னௌ, பிரயாகராஜ், வாரணாசி, கோராபூர், பரேலி, கான்பூர் மற்றும் மீரட் ஆகிய ஏழு மாவட்டங்களில் தனித்தனி மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடத் தொடங்கியுள்ளனர்.

Translate »
error: Content is protected !!