தமிழக-கேரள எல்லையான குமரி மாவட்டத்தை ஒட்டியுள்ள கேரளாவின் பூவரில் உள்ள சொகுசு விடுதியில் போதைப்பொருள் விருந்து நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து காவல் துறையினர் சுற்றுலா பயணிகள் போல் அங்கு சென்று போதை கும்பலை சுற்றி வளைத்தனர். போலீசார் சோதனை நடத்தி 20 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சொகுசு விடுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த போதைப் பொருள்களும் கைப்பற்றப்பட்டன. போதை விருந்து குறித்த தகவல்களை பயணிகளை கவரும் வகையில் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் போதை விருந்து கும்பல் தகவல்களை அனுப்பி வரவழைந்துள்ளனர்.