இருசக்கர வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இருசக்கர வாகனங்களை தயாரிக்கும்போதே வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தும்படி, மத்திய மாநில…
Month: April 2021
மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கொரோனா தொற்று உறுதி
மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிவரும் நிலையில் பொதுமக்கள் மட்டுமல்லாமல் சினிமா துறையினர், அரசியல்வாதிகள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். This is to inform you all…
நாசிக்மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வாயுக்கசிவால் உயிரிழந்த 22 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்
மகாராஷ்டிரத்தின் நாசிக்மருத்துவமனையில் ஆக்ஸிஜன் நிரம்பும் போது திடீரென வாயுக்கசிவால் உயிரிழந்த 22 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். நாசிக்மாவட்டத்தில் உள்ள ஜாகிர்உசேன் மருத்துவமனையில் டேங்கரில் இருந்து சிலிண்டர்களுக்கு ஆக்சிஜன் வாயு மாற்றப்பட்டு நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்,எதிர்பாராத…
மன்சூர் அலிகானின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
கொரோனா தடுப்பூசி குறித்து பேசியதாக பதிவான வழக்கில் மன்சூர் அலிகானின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரிய நிலையில் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ரூ.400 கட்டணத்தை யார் செலுத்துவது? – ப.சிதம்பரம் கேள்வி
அரசு மருத்துவமனையில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள ரூ.400 கட்டணத்தை யார் செலுத்துவது? என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். தடுப்பூசிக்கான கட்டணத்தை மாநில அரசு செலுத்துமா அல்லது பொதுமக்கள் செலுத்த வேண்டுமா என்றும், கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அரசு மருத்துவமனையில் ரூ.400, தனியார்…
நெல்லை மற்றும் சுற்றுவட்டார இடங்களில் இடியுடன் கூடிய மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி
நெல்லை மற்றும் சுற்றுவட்டார இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. பாளையங்கோட்டை, கே.டி.சி.நகர், மேலப்பாளையம், தியாகராஜநகர், மகாராஜா நகர் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
3ம் கட்ட பரிசோதனை… கோவாக்சின் தடுப்பூசி தீவிர அறிகுறி உள்ளவர்களுக்கு 100% பலன் அளிப்பதாக தகவல்
ஐசிஎம்ஆருடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசியின் 3ம் கட்ட பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தீவிர அறிகுறி உள்ளவர்களுக்கு 100% பலன் அளிப்பதாக இடைக்கால அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 78% அளிப்பதாகவும் பரிசோதனையின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனாவை தடுப்பதில் பிரதமர் மோடி படுந்தோல்வி அடைந்திருப்பது ஏன்? – மு.க.ஸ்டாலின் கேள்வி
கொரோனாவை தடுப்பதில் பிரதமர் மோடி இப்படி படுந்தோல்வி அடைந்திருப்பது ஏன்? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தடுப்பூசி விரயமாவதை தடுத்தல், ரெம்டெசிவிர், ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வுகள் நடத்தப்படும் என்று வெளியான தகவல் தவறு – பள்ளிக்கல்வித்துறை
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வுகள் நடத்தப்படும் என்று வெளியான தகவல் தவறு என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. உண்மையில்லாத தகவல்களை வெளியிட்டு மாணவர்களை குழப்ப வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு 20% ஆம்னி பேருந்துகள் மட்டுமே இயக்கம்
சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு 20% ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாளொன்றுக்கு 700 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 90 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. திருச்சி, நெல்லை, கோவை, உள்ளிட்ட ஊர்களுக்கு…