இந்திய கிரிக்கெட் வீரர்களான துணை கேப்டன் ரோகித் சர்மா, சுப்மான் கில், பிரித்வி ஷா, ரிஷாப் பண்ட், நவ்தீப் சைனி ஆகியோர் மெல்போர்னில் உணவு விடுதிக்கு சென்று சாப்பிட்டது சர்ச்சையை கிளப்பியது. அவர்கள் கொரோனா தடுப்பு உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை மீறினார்களா?…
Year: 2021
கொடைக்கானலில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது – ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் துவங்கி வைத்தார்
தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு கொடைக்கானலில் வழங்கப்பட்டது – ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் துவங்கி வைத்தார். பொங்கல் பண்டிகையை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தமிழக அரசு சார்பில் ரூபாய் 2500 உள்ளிட்ட தொகுப்பு வழங்கபட்டு வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கேசிஎஸ் திடல் பகுதியில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் துவங்கி வைத்தார். மேலும் நிகழ்ச்சியில் முன்னாள் நகர் மன்ற தலைவர் கலந்து கொண்டார்.தொடர்ந்துகொடைக்கானல் நகர் பகுதி மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலும் ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்கபட்டது. கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் வாங்கி சென்றனர்.மேலும் சமூக இடைவெளியை பின் பற்றாமல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
உத்தமபாளையம் அரசு கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து வீணாகி போன நெல் மூட்டைகள்
உத்தமபாளையம் அரசு கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் வீணாகி உள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் வாங்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். உத்தமபாளையம் அதனை…
உலக சுற்றுலா தளமான கொடைகானலில் சாலைகள் வலு இழந்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி…
உலக சுற்றுலா தளமாக இருக்கக்கூடிய கொடைக்கானல் தன்னுடைய தகுதியை சாலைகள் மூலம் இழந்து வருகிறது. படு மோசமான சாலைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதி… திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மிகப்பெரிய சுற்றுலா தளம் உலக நாடுகள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருவது வழக்கம் .. இந்த வருடம் கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்திருந்தாலும் தற்போது மெல்ல அதிகரிக்க தொடங்கியிருக்கிறார்கள் கடந்த வருடம் 80 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வரை கொடைக்கானலுக்கு வருகை தந்திருந்தார்கள். வருடத்திற்கு 50 லட்சம் சுற்றுலாப் பயணிகளுக்கு மேற்பட்டோர் கொடைக்கானலுக்கு வருவது வழக்கம் இப்படி இருக்க கூடிய சூழ்நிலையில் வரக்கூடிய சுற்றுலா பயணிகள் மற்றும் கொடைக்கானலில் இருக்கக்கூடியபொது மக்கள் பெரும்பாலும் மலைச்சாலையே பயன்படுத்துகிறார்கள். கொடைக்கானலில் இருக்கக்கூடிய சாலைகள் நெடுஞ்சாலை துறை மற்றும் கொடைக்கானல் நகராட்சி சார்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது பிரதான சாலையான வத்தலகுண்டு – கொடைக்கானல் பழனி – வத்தலகுண்டு சுற்றுலாத்தலங்கள் ஏரிசாலை உள்ளிட்டவை நெடுஞ்சாலைத்துறை சார்பாகவும் நகர்ப்பகுதிகளில் இருக்கக்கூடிய சாலைகள் நகராட்சி சார்பாகவும் பராமரிக்கப்பட்டு வருகிறது… மழை காலங்களில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ,பாறை உருண்டு விழுதல் உள்ளிட்டவைகள போக்குவரத்து பாதிக்கப்படும். இதற்கு நிரந்தர தீர்வு இதுவரை எட்டப்படவில்லை .மேலும் தற்போது நாம் பார்க்கக் கூடிய இந்த சாலைகள் கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலைகள் அல்ல கொடைக்கானல் நகர்ப்பகுதிகளில் உள்ள சாலைகள் இதில் நெடுஞ்சாலை துறை சார்பாக கோடிக்கணக்கில் சாலைகள் டெண்டர் விடப்படுகிறது . தற்போது கூட 45 கோடி ரூபாய்க்கு மேல் பராமரிப்பு பணிக்காக கொடைக்கானல் நெடுஞ்சாலைத் துறைக்கு தமிழக அரசு ஒதுக்கி இருக்கிறது இந்த 45 கோடி ரூபாயில் பல்வேறு பணிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது பணிகள் நடை பெற்றாலும் கூட அந்த பணிகள் உரிய நேரத்தில் முடிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது . முக்கியமாக கொடைக்கானலில் இருந்து பழனிக்கு செல்லக்கூடிய பிரதான சாலையில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள் ..இந்த சாலை கடந்த பல மாதங்களாகவே பராமரிப்பு பணியில் இருக்கிறது இதனால் அந்த பகுதியில் செல்லக்கூடிய வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கக் கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. சாலை பணிகள் நடைபெறும் இடத்தில் எச்சரிக்கை பலகை வைக்கப்படுவதில்லை மேலும் அந்த இடங்களில் பல்வேறு கனரக வாகனங்கள் சாலை பணிக்காக இயக்கப்படுவதால் மேலும் சாலைகள் நலிவடைய தொடங்குகின்றது ..இதே போன்று பெரும்பாலான மக்கள் பயன்பாட்டில் இருக்கக்கூடிய பாம்பார் புரம் சாலையும் இதேநிலைதான் ஏற்பட்டிருக்கிறது. மேலும் இந்த 45 கோடி ரூபாய்க்கு வேலை கொடுக்கப்பட்டாலும் இந்த வேலைகளை முறையாக அதிகாரிகள் கவனிப்பதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது பெயரளவுக்கு முடிக்கக்கூடிய இந்த வேலைகள் அடுத்த மழை காலம் வரும் முன் மீண்டும் அதே வேலை வருவதாக கொடைக்கானல் மக்கள் குற்றம் சாட்டிவருகிறார்கள். இது மட்டுமல்லாது பல்வேறு சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிப்பதால் கொடைக்கானலுக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் விபத்திலும் பழுதடைந்து ஆங்காங்கே நிற்கக்கூடிய ஒரு சூழ் நிலையும் ஏற்பட்டிருக்கிறது அதிகாரிகள் முறையாக இந்த சாலை பணிகளை கவனிக்காததால் இதுபோன்ற நிலை கொடைக்கானலில் பல வருடங்களாகவே தொடர்கிறது என்று கோடை மக்கள் குமுறுகிறார்கள். மேலும் கொடைக்கானலில் நடைபெறக்கூடிய டெண்டர்கள் ஆளும் கட்சியினர் பெரும்பாலும் எடுத்துக் கொள்வதால் அந்த வேளையில் அதிகாரிகள் முறையாக கவனிப்பதில்லை ..மேலும் உலக சுற்றுலா தளமாக இருக்கக்கூடிய கொடைக்கானலில் அடிப்படை வசதிகளில் ஒன்றாக இருக்கக்கூடிய சாலை வசதியை முழுவதுமாக மேம்படுத்தி உலக மக்கள் அனைவரும் வந்து சென்று பார்ப்பதற்கு எந்த ஒரு தடையும் இல்லாமல் ஏற்படுத்தித் தரவும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பணிகளை உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்துள்ளது.
நோபல் வேர்ல்ட் ரெகார்ட் : சிலம்பாட்ட பயிற்சி பள்ளி 250 மாணவர்களை கொண்டு தொடர்ச்சியாக 30 நிமிடம் இரட்டை கம்புகளை சுழற்றி சாதனை
நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பெறும் வகையில் சிலம்பாட்ட பயிற்சி பள்ளி 250 மாணவர்களை கொண்டு தொடர்ச்சியாக 30 நிமிடம் இரட்டை கம்புகளை சுழற்றி சாதனை. தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம்பெறும் நிகழ்ச்சிக்காக 250 சிலம்பப்…
அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் வழங்க குடியரசு கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் வழங்க குடியரசு கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவர் அமெரிக்காவில் 46–வது…
டெல்லி நோக்கி பேரணி நடத்த முயன்ற அரியானா விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடந்து வரும் போராட்டத்தில் பங்கேற்க பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றனர். அந்தவகையில் அரியானாவை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் டெல்லி செல்வதற்காக கடந்த சில நாட்களாக டெல்லி–ஜெய்ப்பூர் சாலையில் திரண்டு வந்தனர். அவர்கள்…
40-வது நாளாக நீடிக்கும் விவசாயிகளின் போராட்டம்! மத்திய அரசுடன் இன்று மீண்டும் பேச்சுவார்தை
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாய அமைப்புகள் மத்திய அரசுடன் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றன. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் குறைந்த பட்ச ஆதரவு விலை மற்றும் மண்டி அமைப்பு உள்ளிட்டவற்றை பாதிப்பதாக குற்றம்…
கோரோனோ ஊரடங்குக்கு பிறகு புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு
உலகையே மிரட்டிய கொரோனா இந்தியாவுக்குள்ளும் புகுந்ததால் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் மூடப்பட்டன. போக்குவரத்து உள்ளிட்ட மாமூல் வாழ்க்கை அனைத்தும்…
தமிழகத்தில் இன்று பொங்கல் பரிசு வியோகம் தொடங்கியது
தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் 2,500 பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் திட்டத்தை இன்று அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,500, பச்சரிசி, சர்க்கரை, திராட்சை,…