2022-ம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம் – மத்திய உள்துறை அமைச்சகம்

இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதுகள் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் பத்ம விருதுகள் என்று அழைக்கப்படும்.

புதுடெல்லி,

இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதுகள் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் பத்ம விருதுகள் என்று அழைக்கப்படும். இந்நிலையில் 2022ம் ஆண்டு குடியரசு தினத்தின் போது வழங்கப்பட உள்ள பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளிட்ட செய்தி, வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் மக்கள் தங்களுடைய பரிந்துரைகளை www.padmaawards.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். பரிந்துரை தொடர்பான சந்தேகங்கள் குறித்து www.mha.gov.in என்ற இணையதளத்தில் தீர்வு காணலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

 

Translate »
error: Content is protected !!