பாகிஸ்தானில் பனிப்புயலில் சிக்கி 22 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். கடும்பனிப்பொழிவு நிலவும் சூழலில், மலைகளின் ரம்மிய காட்சிகளை ரசிக்க நேற்று சுற்றுலா பயணிகள் பலர் இஸ்லாமாபாத்தில் உள்ள முர்ரே பகுதிக்கு சென்றுள்ளனர். ஆனால் அங்கு திடீரென பனிப்புயல் வீசியது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் பலர் வாகனங்களை அப்படியே நிறுத்திவிட்டு, காத்திருந்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்தநிலையில், கடும் உறைபனியில் வாகனத்தில் இருந்த 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் சிலர் கார்பன்மோனாக்சைட் என்ற நச்சுகாற்றினை சுவாசித்ததால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தகவல் அறிந்து அங்கு விரைந்த ராணுவ வீரர்கள் வாகனங்களில் இருந்தவர்களை மீட்டு, வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர்.