தமிழகத்தில் 2 ஆயிரத்து 356 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
தினசரி 30 ஆயிரம் பேருக்கு தோற்று உறுதி செய்யப்படுகிறது. தற்போது 2 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் மருத்துவமனையிலும் வீட்டிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் எதிரொலியாக தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை அதிகரிக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளது.
அதன்படி தமிழகத்தில் தற்போது மொத்த 2 ஆயிரத்து 356 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதனை தமிழக அரசு அதிகார்ப்பூர்வமாக அறிவித்துள்ளது. மொத்தமுள்ள 39 மாவட்டங்களில் 18 மாவட்டங்களில் மட்டும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் ஆயிரத்து 868 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.