தமிழகத்தில் நடைபெற்று வரும் 23-வது தடுப்பூசி முகாம்

சென்னை கே.கே. நகரில் இன்று நடைபெற்ற 23-வது தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடக்கி வைத்தார்.

தமிழகத்தில் கொரொனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் அதனை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 23 வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 1600 தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், இதுவரை நடத்தப்பட்ட மெகா தடுப்பூசி முகாம் மூலம் 3 கோடியே 71 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றார். முன்னதாக சென்னை கே.கே.நகரில் தொடங்கிய தடுப்பூசி முகாமில் சென்னை மேயர் ப்ரியா ராஜன் கலந்துகொண்டார்.

Translate »
error: Content is protected !!