3 குழுக்கள்….இதை மீறி எப்படி பணப்பட்டுவாடு ஆகும்..? பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை ஈடு பட்டு வருகின்றனர் .

தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியானது திண்டுக்கல் மாவட்ட எல்கையில் இருந்து துவங்குவதால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாள் காலை முதல் தேர்தல் பறக்கும் படையினர் தேனி மாவட்ட எல்கையான காட்ரோடு, வைகை அணை மற்றும் தேனி நகர் முழுவதும் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தேர்தலில் பணப்பட்டுவாடை தடுக்க 3 குழுக்கள் மூலம் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை ஒரு அணியும்  2 மணி முதல் இரவு 10 மணிவரை ஒரு அணியும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒரு அணி என 3 குழுக்கள் அமைக்கபபட்டு அந்த குழுவில் மாவட்ட திட்ட அலுவக அதிகாரி ஜோதி தலைமையில் 4 காவலர்கள் மற்றும் விடியோ பதிவாளர் என தனித்தனியே பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு பறக்கும் படையில் தீவர கண்காணிப்பில் ஈடுபட்டு வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வாகனத்தில் வருபவர்கள் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உரிய ஆவங்கள் இன்றி கொண்டு வரப்படும் பணம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படும் என பறக்கும் படை அதிகாரி தெரிவித்தார்

Translate »
error: Content is protected !!