36 நாட்களே உள்ளது…! சசிகலா என்ன செய்ய போகிறார்…? குழப்பத்தில் தொண்டர்கள்..!

சென்னை,

சசிகலா பிரச்சாரத்துக்கு செல்வாரா? மாட்டாரா? யாருக்காக ஓட்டு கேட்பார்? என்ன சொல்லி ஓட்டு கேட்பார் என்பன போன்ற எதிர்பார்ப்புகள் எழுந்து வருகின்றன. சென்னை வந்து கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு சசிகலா என்ன செய்தார் என்றே தெரியவில்லை.

ஜெயலலிதா பிறந்த நாள் அன்றுவரை எல்லாமே சஸ்பென்ஸ் ஆக இருந்தது.. இதற்கு பிறகுதான் ஒருசில அரசியல் சந்திப்புகள் நடந்தன. அந்த சந்திப்புகளே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சமயத்தில், சசிகலா தேர்தலை எப்படி சந்திக்க போகிறார், அவருக்கு உள்ள சிக்கல்கள் என்ன மாதிரியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுகிறது. இதுகுறித்து ஒருசில அரசியல் நோக்கர்களிடம் பேசினோம்

ஒரு சீட், 2 சீட் தந்தால், கூட்டணியில் சேர மாட்டோம், எங்கள் தகுதி அறிந்து சீட் தர வேண்டும் என்று சரத்குமார் ஏற்கனவே பலமுறை சொல்லி வந்த நிலையில், சசிகலா உடனான திடீர் சந்திப்பு, அதிமுக கூட்டணியில் இருந்து விலகி சசிகலாவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க சமக முடிவெடுத்துள்ளதாக அன்றைய தினமே கருதப்பட்டது. தமீம் அன்சாரி ஒருபக்கம் இருந்தாலும், கருணாஸ் அவரை சந்திக்க தேதி கேட்டிருப்பதாக தெரிகிறது.

ஆனால், சசிகலாவை பொறுத்தவரை ஒருசில அப்செட்டில் இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்களே சொல்கிறார்கள்.. காரணம், அவர் எதிர்பார்த்த அளவுக்கு முக்கிய பிரமுகர்கள் அவரை சென்று சந்தித்து ஆலோசனை நடத்தாதுதான்.. அதனால்தான், தானாக முன்வந்து ஒருசில புள்ளிகளிடம் பேச்சுவார்த்தையை துவக்கி இருக்கிறார்.. தன் தரப்பை அனுப்பி அவர்களிடம் சமாதானம் நடந்துள்ளது.

இப்போதுகூட, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டணி அமைக்கும் வேலை தீவிரமாக நடக்கிறது.. நமது எம்ஜிஆரில் ஒரு கட்டுரை வெளியாகி உள்ளது.. அதில், “இன்னும் 36 நாட்களே இடையில் உள்ளதுஇதற்கு ஒவ்வொரு தொகுதியிலும் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்காளர்களின் ஆதரவைப் பெற்று வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெறப்போவதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு எத்தனை இடங்கள் வெற்றி என்பது மட்டும் முக்கியமல்ல. எத்தனை சதவிகித வாக்குகள் சசிகலா பெற்றுத் தந்தார்கள். கழக ஆட்சியை அமைத்து காட்டினார்கள் என்பதை எல்லாம் மக்கள் பேசும் காலம் ஊடகங்கள் விவாதிக்கும் காலம் வெகு தூரமில்லைஎன்பன போன்ற வரிகள் உள்ளன.

ஆனால், இது சாத்தியமா என்று தெரியாது.. தமிழகம் முழுக்க சசிகலாவால் பிரச்சாரம் செய்ய முடியாது என்றே தெரிகிறது.. அப்படியே சென்றாலும் எந்த கட்சிக்கு வாக்கு சேகரிப்பார்? அமமுகவுக்கு என்றால், அது வாய்ப்பில்லை.. பகிரங்கமாக அமமுகவுக்கு பிரச்சாரம் செய்ய முடியாது.. தீய சக்தி, நச்சு சக்தி என்று அதிமுக தலைமையை குற்றஞ்சாட்டலாமே தவிர, அதிமுகவுக்கு என்றும் முழுசாக ஓட்டு கேட்க முடியாது.

இந்த தேர்தலை சசிகலா எப்படி எதிர்கொள்வார் என்றால், அதிமுக புள்ளிகளை சந்திக்க முயல்வதும், அவர்களிடம் ஆலோசனை நடத்துவதும்தான் அவரது முக்கிய ஐடியா.. இப்படி செய்தால், அதிமுக தலைமை ஆட்டம் காணும்.. மக்களிடம் நம்பிக்கையை இழக்கும்.

விருப்ப மனு பட்டியல் இறுதி செய்யப்படும்போதுதான், உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்.. நிறைய அதிருப்தியாளர்கள் சசிகலாவை தேடி வரலாம்.. அல்லது அதிமுகவுடன் மனக்கசப்பில் இருப்பவர்களும், சாதீய விசுவாசிகளும் சசிகலாவை நாடி வரலாம். இந்த தேர்தலில் 60 சீட்களை மெஜாரிட்டியுடன் வென்று காட்ட வேண்டும் என்று எடப்பாடியார் நினைப்பதுபோலதான், சசிகலாவும் நினைக்கிறார்..

அதனால், அதிமுக ஆதரவாளர்களிடம் மறைமுகமாக பேசுவதன்மூலம், அதிமுக தலைமையை டேமேஜ் செய்வதுடன், அதன்மூலம் அமமுகவின் ஓட்டு வங்கியையும் உயர்த்தும் யுக்தியை கையாளலாம்.. அமமுகவில் பெரும்பாலும் அதிமுகவினரே என்பதால், இதை சொல்லியே பொதுச்செயலாளர் பதவியையும் குறி வைக்கலாம்.

இன்னொரு பக்கம், எடப்பாடியாரின் சட்டசபை அறிவிப்புகள் எல்லாம் வாக்குக்கான ஒன்றாகவே கருதப்படுகிறது.. இதற்கெல்லாம் அரசாணை எப்போது வருமோ தெரியாது.. அந்த அறிவிப்புகளுக்கான அரசாணை வராவிட்டால், அதிமுக தலைமை மீதான நம்பிக்கை மேலும் குறைய வாய்ப்புள்ளது. அதேபோல, உட்கார்ந்த இடத்தில் இருந்தே, அனைத்தையும் சரிசெய்யும் திறமை சசிகலாவுக்கு இருந்தாலும், அமமுக என்றும் சொல்லி கொள்ளாமல், அதிமுக என்றும் சொல்லி கொள்ள முடியாமல் ரெண்டாங்கெட்டான் நிலைமையில்தான் அவர் தவிப்பதுபோல தெரிகிறதுஎன்றனர்.

 

Translate »
error: Content is protected !!