5வது நாளாக தொடங்கிய மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர்…

புதுடெல்லி,

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தீவிர போராட்டங்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இந்த போராட்டங்களுக்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்து வருகின்றன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், மேற்படி சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி வரும் அந்த கட்சிகள் நாடாளுமன்றத்திலும் இந்த கோரிக்கையை எழுப்பி வருகின்றன.

இதனால் நேற்று முன்தினம் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்றும் இந்த விவகாரம் இரு அவைகளிலும் எதிரொலித்தது. வேளாண் சட்டங்களை திரும்பபெறக் கோரி நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப் பட்டது.

மேல்சபையில் கோஷமிட்ட 3 ஆம் ஆத்மி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் 5வது நாளான இன்று மாநிலங்களவை தொடங்கியது. குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மாநிலங்களையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

Translate »
error: Content is protected !!