தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, பலலட்சம் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த மாதம் முதல் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 5-வது மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது.
அதில், 32 ஆயிரம் தடுப்பூசி முகாம்களில் 22,52,641 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது, அதில் முதல் தவணையில் 11,50,351 மற்றும் இரண்டாவது தவணையில் 11,02,290 தடுப்பூசி போடப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.