6 பேர் தான்… “கண்டிப்பாக கோட்டையில் பெரிய ஆதிக்கத்தை ஏற்படுத்துவோம்”- மநீம நிர்வாகிகள் உறுதி

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கண்டிப்பாக மிகப்பெரிய என்ட்ரியை கொடுக்கும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. தமிழக சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் ஒரு மாதம் கூட இல்லை. இதில் மக்கள் நீதி மய்யம் புதிய அணியை உருவாக்கி தேர்தலில் களமிறங்கி உள்ளது.

இந்த கூட்டணியில் ஐஜேகே, சமகவிற்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் மீதமுள்ள 154 இடங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுகிறது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கண்டிப்பாக மிகப்பெரிய என்ட்ரியை கொடுக்கும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதன்படி நேற்று வெளியான ஏபிபி சி வோட்டர் கருத்து கணிப்பில் திமுகதான் மீண்டும் வெற்றிபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் மக்கள் நீதி மய்யமும் தங்கள் கால் தடத்தை வலுவாக பதிக்க போகிறதாம்.

அதன்படி மக்கள் நீதி மய்யம் இந்த தேர்தலில் குறைந்தபட்சம் 2-6 இடங்களை பெற வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் வாக்கு சதவிகித்தை அதிகரிக்கும், பலம் மிகுந்த புதிய மாநில கட்சியாக உருவெடுக்கும் 7%க்கும் அதிகமான வாக்குகளை பெறும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக வெளியான டைம்ஸ் நவ்சிவோட்டர் கருத்து கணிப்பிலும் இதே போல் மக்கள் நீதி மய்யம் 7%வாக்குகளை பெறும், அதிகபட்சம் 7 இடங்களை பிடிக்கும் என்று கூறப்பட்டது. தற்போது இன்னொரு கருத்து கணிப்பும் இதே போல தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள்.. 6 இடங்களை வெல்வது மகிழ்ச்சிதான்.

ஆனால் 6 இடங்களை விட அதிகமாக நாங்கள் வெற்றிபெறுவோம். எங்களுக்கு ஆதரவாகவே களநிலவரம் உள்ளது. கணிப்பில் இருப்பதை விட அதிக வாக்கு சதவிகிதத்தை நாங்கள் பெறுவோம். 6 பேரை அனுப்பினாலும் நாங்கள் கண்டிப்பாக கோட்டையில் பெரிய ஆதிக்கத்தை ஏற்படுத்துவோம் என்று மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் உறுதியாக கூறுகிறார்கள்.

Translate »
error: Content is protected !!