61,214 மூன்றாம் பாலின குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கை

நாடு முழுவதும் 61 ஆயிரத்து 214 மூன்றாம் பாலின குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பள்ளிகளில் பாலின சமநிலை குறித்த தகவல்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகள், பெண் குழந்தைகள், மூன்றாம் பாலினத்தவர்கள், பட்டியல் இனத்தவர்கள், சிறுபான்மையினர் ஆகியோரை அதிகளவில் கல்வி கற்க வைப்பதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார். அந்தவகையில், நாடு முழுவதும் 61 ஆயிரத்து 214 மூன்றாம் பாலின குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

Translate »
error: Content is protected !!