சசிகலாவின் 2 அதிரடி அரசியல் முடிவுகள்…! அதிமுகாவின் நிலைமை என்ன?

சென்னை,

சசிகலா 2 அரசியல் முடிவுகளை அதிரடியாக எடுக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. சசிகலா ரெஸ்ட் முடிந்து சென்னை திரும்பும்போது அவருக்கு ஏகப்பட்டது வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆனால், அவர்கள் எல்லாம் அதிமுகவினரா? அமமுகவினரா என்பது தெளிவாக தெரியவில்லை.. அப்படி ஒரு உற்சாகத்தை பார்த்ததுமே அன்றைய தினம் அல்லது மறுநாள் ஏதோ ஒரு பரபரப்பு காத்து கிடக்கிறது என்ற எண்ணம் படர்ந்தது..

ஆனால், விடிகாலை சசிகலா தி.நகர் வீட்டுக்குள் நுழைந்ததோடு சரி, ஒரு அதிமுக கொடி கட்டின கார் கூட அந்த வீட்டு முன்னாடி இல்லை.. யாரும் வரவும் இல்லை.. சசிகலாவும் செய்தியாளர்களை சந்திக்கவில்லை.. ஆனால் உண்மையில் சசிகலாவுக்கே இது கொஞ்சம் அப்சட்தானாம்..

தன்னை பெரிய அரசியல் சக்தியாக நினைத்து, அதிமுகவில் இருக்கும் பலர் உடனடியாக அணிதிரண்டு வருவார் என்று நினைத்தார்.. அப்படி எதுவும் நடக்கவில்லை. அதனால்தான் ஏதோ மெகா திட்டம் வைத்திருப்பதாக தெரிகிறது.

இப்போதைக்கு அவரது முதல் எண்ணம், எப்படியாவது, அதிமுக பொதுச்செயலாளராக வேண்டும்அதற்கு கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்அதற்கு ஒரு சில விஷயங்களை விட்டுத்தரும் முடிவில் இருக்கிறாராம்.

அதன்படி, அதிமுகவின் பொதுச்செயலாளர் தான் தான் என்பதை வலியுறுத்தும் நிர்வாகிகளை வைத்தே, மறுபடியும் அந்த பதவியை அதிகாரபூர்வமாக பெறுவது என்பதுதான் அந்த முதல் திட்டம். அதற்காக ஒரு டீம் உருவாக்கி, அதற்கு டைமும் தந்துள்ளார்..

ஒருவேளை இது நடக்காவிட்டால், அமமுக அடுத்த சாய்ஸ் ஆகும். அந்த கட்சி தலைவராக சசிகலா பொறுப்பை கையில் எடுப்பார்.. அமமுக சார்பில் 234 தொகுதிகளிலும், போட்டியிட முடிவு செய்வது.. அதற்காக சிறிய சிறிய கட்சிகள் என்றாலும் அவர்களுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்பது என்ற முடிவு எடுத்துள்ளாராம்..

இதில் அமமுக ஜெயிக்கா விட்டாலும் சரி, திமுகவுக்கு அடுத்து வந்தால்கூட அது தனக்கு பலம் என்று நினைக்கிறாராம்.. அதாவது குறைந்தபட்சம் 60 தொகுதிகளில் வென்றால்கூட போதும் என்றிருக்கிறார் சசிகலா.. இந்த தேர்தல் முடிவுக்கு பிறகு, அதிமுகவுடன் அமமுகவை இணைக்கும் முயற்சியை மேற்கொள்ளலாம் என்பதே சசிகலாவின் கணக்காக உள்ளது..

இந்த இரு திட்டத்தில் முதல் திட்டம் சாத்தியமா என்பது இப்போதைக்கு கஷ்டம் என்றே தெரிகிறது.. ஏனென்றால் முதல்வர் அந்த அளவுக்கு கட்டுக்கோப்பாக கட்சியை கையில் வைத்துள்ளார்.. அதனால், 2 வது ஆப்ஷனே சசிகலாவுக்கு கை கொடுக்கலாம்.. அமமுகவை ஆரம்பிக்கும்போதே அதில் தலைமை பதவியை சசிகலாவுக்கு ஒதுக்கி வைத்துவிட்டார் தினகரன்.. அதனால், அந்த கட்சிக்கு தலைமை ஏற்பதில் சிக்கல் இருக்காது..

அதேபோல, அமமுகவுக்கு வாக்கு வங்கி 5 சதவீதத்தையும் கையில் வைத்துள்ளார் தினகரன்.. இதுவும் ஓரளவு தேர்தலுக்கு உதவும் என்றே தெரிகிறது.. இருந்தாலும் கெத்து காட்டி கொண்டிருக்கும் அதிமுகவுக்கும், உயர்ந்து கொண்டிருக்கும் திமுகவுக்கும் சசிகலா டஃப் தருவாரா என்பதும் எதிர்பார்ப்புக்குரிய ஒன்றுதான். எப்படி பார்த்தாலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயேடமார்என்று ஒரு பூகம்பம் அதிமுகவுக்குள் வெடிக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

Translate »
error: Content is protected !!