ஜம்மு காஷ்மீரில் உள்ள நிலைமையை ஆராய 24 நாடுகளின் தூதர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்

ஜம்மு காஷ்மீரில் உள்ள நிலைமையை ஆராய்ந்து அறிந்துகொள்வதற்காக 24 நாடுகளின் தூதர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் அமைதியான சூழலையும் இயல்பு நிலையையும் கொண்டு வர எடுக்கப்பட்ட முயற்சிகளை வெளிநாடுகளுக்கு எடுத்துக் காட்டும் வகையில் வெளிநாடுகளின் தூதர்கள் ஜம்மு காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. அவ்வகையில், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 24 நாடுகளின் தூதர்கள் 2 நாள் பயணமாக இன்று ஜம்மு காஷ்மீர் வந்துள்ளனர்.

இன்று ஸ்ரீநகர் வந்த அவர்கள், அங்கிருந்து பத்காம் மாவட்டம் மகாம் பகுதிக்கு சென்றனர். அங்கு பஞ்சாயத்து அமைப்பு செயல்முறை மற்றும் பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பது குறித்து அவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. கிராம மக்களின் வீடுகளுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது தூதர்கள், உள்ளூர் மக்களுடன் கலந்துரையாடினர். வெளிநாட்டு தூதர்கள் வருகையையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுஜம்மு காஷ்மீர் நிலைமையை அறிந்துகொள்வதற்காக, வெளிநாட்டு தூதர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Translate »
error: Content is protected !!