தேனியில் பெட்ரோல், கேஸ் விலை உயர்வை கண்டித்து மாநில அரசிற்கு எதிராக திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

தேனியில் பெட்ரோல், கேஸ் விலை உயர்வை கண்டித்து திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு டிராக்டர் மற்றும் மாட்டு வண்டியில் வந்த தொண்டர்கள். டிராக்டரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர். மாட்டு வண்டியில் வந்த தங்க தமிழ்ச்செல்வன்.

தமிழகம் முழுவதும் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் தேனி மாவட்டத்தில் தேனி, போடிநாயக்கனூர், பெரியகுளம், கம்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தேனி பங்களாமேடு பகுதியில் திமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக கட்சியினர் சிலர் டிராக்டர் மற்றும் மாட்டு வண்டியில் திமுக கட்சி கொடி கட்டி பழனிசெட்டிபட்டி பகுதியில் இருந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு ஊர்வலமாக வந்தனர். இதில் பழைய பேருந்து நிலையம் அருகே திமுகவினர் வந்த டிராக்டரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர் மாட்டு வண்டியை மட்டும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு அனுப்பினர். 

பின்னர் ஆர்பாட்டத்தில் பங்கேற்க வந்த திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் ஆர்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு சிறுது தூரம் வரை மாட்டு வண்டியில் வந்தார். பின்னர் பெட்ரோல், டீசல், கேஸ் விலையை உயர்த்திய மத்திய மாநில அரசிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய தங்க தமிழ்ச்செல்வன் கச்சா எண்ணெய் விலை குறைவாக உள்ள இத்தருணத்தில் பாக்கிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகள் குறைந்த விலையில் பெட்ரோல் டீசல் வழங்கி வரும் நிலையில் பெட்ரோலுக்கான மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரியை உயர்த்தி அதிக விலைக்கு விற்கப்படுவதால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் உயர்நிலைக் திட்டக்குழு உறுப்பினர் மூக்கையா, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார், தேனி நகர செயலாளர் பாலமுருகன் மற்றும் திமுக ஒன்றிய நகர சார்பு அணி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய மாநில அரசிற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

 

Translate »
error: Content is protected !!