இந்த 5 மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வருபவர்கள்…கட்டாயம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருக்க வேண்டும்

டெல்லி,

கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் இருந்து சனிக்கிழமை முதல் டெல்லிக்கு வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சோதனை என்ற சான்றிதழ் காட்ட வேண்டும் என்ற அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்ட உள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.

கர்நாடகா மாநிலம் கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து வருபவர்கள் 72 மணி நேரத்துக்கு முந்தைய பரிசோதனை செய்த கொரோனா நெகட்டிக் சான்று வைத்திருக்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டது.

கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா அடங்க மறுக்கிறது. உலகின் பல்வேறு நாடுகள் கொரோனா தாக்கத்தில் இருந்து இன்னும் மீள முடியாத நிலையில் இந்தியாவில் ஆறுதல் அளிக்கும் படியாக ஓரளவு தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது.

தமிழகம் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் கொரோனாவை பெருமளவு குறைத்து விட்டன.இதனால் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் நமது அண்டை மாநிலமான கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா அடங்க மறுக்கிறது.

அதுவும் கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்புகள் மிக அதிகமாக உள்ளன. முதலில் கொரோனாவை கட்டுப்படுத்திய மாநிலம் என்ற பெயரை பெற்ற கேரளாவில் தற்போது பாதிப்புகள் அதிகமாக உள்ளன.

அங்கு தினமும் 5,000-க்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மகாராஷ்டிராவில் 3 மாதங்களுக்கு பிறகு 6,000-க்கும் மேல் பாதிப்புகள் பதிவாகி மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இந்த 2 மாநிலங்களிலும் திரிபு வகை கொரோனா தொற்றுகள் உள்ளதாக மத்திய எச்சரித்து உள்ளது.

கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களின் அருகே உள்ள மற்ற மாநிலங்கள் கட்டுப்பாட்டை இறுக்கிக் கொண்டு வருகின்றன. கேரளாவில் இருந்து வந்தவர்களால் கர்நாடகாவில் கொத்து, கொத்தாக தொற்று பதிவானது.

இதனால் உஷார் அடைந்த கர்நாடகா மாநிலம் கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து வருபவர்கள் 72 மணி நேரத்துக்கு முந்தைய கொரோனா நெகட்டிக் சான்று வைத்திருக்க வேண்டும் உத்தரவிட்டது. இந்த நிலையில் தலைநகர் டெல்லியும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க ஆயத்தமாகி விட்டது.

அதாவது கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் இருந்து வரும் சனிக்கிழமை முதல் டெல்லிக்கு வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சோதனை என்ற சான்றிதழ் காட்ட வேண்டும் என்ற அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்ட உள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

 

Translate »
error: Content is protected !!