ஜெயலலிதாவின் உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றிணைந்து, மீண்டும் அதிமுக ஆட்சியமைக்க வேண்டும் – சசிகலா

சென்னை,

ஜெயலலிதாவின் உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றிணைந்து, மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.z`

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, சென்னை தியாகராய நகர் இல்லத்தில், ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து, சசிகலா மரியாதை செலுத்தினார்.

மேலும் டிடிவி தினகரன் மற்றும் அமமுக தொண்டர்கள் அனைவருக்கும் சசிகலா இனிப்புகளை வழங்கினார். பின்னர் பேசிய சசிகலா, அனைவரும் ஒன்றிணைந்து, தமிழக தேர்தலில் செயல்பட வேண்டும். ஜெயலலிதாவின் உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும்.

ஜெயலலிதாவுக்கு காட்டும் நன்றிக்கடன் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது. நம்முடைய இலக்கு வெற்றி. புரட்சித்தலைவி நமக்கு சொல்லிவிட்டு சென்றது. தமிழகத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலும் நம்முடைய ஆட்சி இருக்க வேண்டும் என்பது தான்.

அதை மனதில் வைத்து நம்முடைய உடன்பிறப்புக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று நாம் ஆட்சி அமைக்க வேண்டும் . அதை செய்வீர்கள் என்று நம்பிக்கை எனக்கு உள்ளது. ஏனென்றால் நீங்கள் புரட்சித்தலைவியின் உண்மை தொண்டர்கள். நிச்சயமாக நீங்கள் இதை செய்வீர்கள் நான் உங்களுக்கு துணை இருப்பேன்.

நான் விரைவில் தொண்டர்களையும் , பொதுமக்களையும் சந்திக்க வருவேன் என அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். ஜெயலலிதாவின் ஆன்மா நம்மோடுதான் உள்ளது. தேனீக்களைப் போல சுறுசுறுப்பாக தேர்தல் பணியாற்ற வேண்டும். இதற்கு உறுதி ஏற்று, நீங்கள் எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதை நான் அன்போடு கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

 

Translate »
error: Content is protected !!