இணைநோய்கள் உள்ள 45-வயது மேற்பட்டவர்களுக்கு மார்ச் 1 முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் – மத்திய அரசு

இணைநோய்கள் உள்ள 45-வயது மேற்பட்டவர்களுக்கு மார்ச் 1 முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டதிற்கு பிறகு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவதுஅரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும்

தனியார் மருத்துவமனைகளுக்கும் கொரோனா தடுப்பூசி போட விரைவில் அனுமதி வழங்கப்படும்.  60-வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய்கள் உள்ள 45-வயதுக்கு மேலானவர்களுக்கும் வரும்  மார்ச் 1 ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கும்என்றார்நாடு முழுவது கடந்த  ஜனவரி 16 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது

 

Translate »
error: Content is protected !!