நிரவ் மோடியை இந்தியா கொண்டு வரும் வழக்கில் தீர்ப்பு..!

லண்டன்,

நிரவ் மோடியை இந்தியா கொண்டு வரும் வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை மூலம் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, கடன் தொகையை செலுத்தாமல் தப்பி ஓடியதை அடுத்து, லண்டனில் தலைமறைவானார்.

அவர் இங்கிலாந்து போலீசாரால் கைது செய்யப்பட்டு வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் உள்ள நிரவ் மோடி பலமுறை தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது இந்நிலையில், அவரை இந்தியாவிற்கு திருப்பி கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப கோரி இந்திய அரசு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணைகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!