ஒரே அடியாக 234 வேட்பாளர்கள்… நான் தனியாகத்தான் நிற்பேன்…! அதிரடியாக களமிறங்கிய சீமான்..

சென்னை,

திமுக, அதிமுக போன்ற வலிமையான மூத்த கட்சிகள் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையை முழுதாக முடிக்காமல் மீட்டிங் மேல் மீட்டிங் போட்டுகொண்டு இருக்கின்றன. கூட்டணி பேச்சுவார்த்தைகள் எல்லாம் முடிந்தாலும் அதன்பின் தொகுதிகளை தேர்வு செய்து.

பின் வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும்.. இப்படி மூத்த கட்சிகள் ஸ்ஸ்ஸ்ப்பா என்றுகண்ணை கட்டிக்கொண்டுஇருக்கும் போது ஒரு கட்சி மட்டும் எல்லோரையும் ஓவர் டேக் செய்து போய்கொண்டு இருக்கிறது.. அது நாம் தமிழர்!

2021 சட்டசபை தேர்தலுக்காக நாம் தமிழர் மற்ற கட்சிகளை விட வேகமாக செயல்பட்டு வருகிறது. இணையத்தில் முன்பே பிரச்சாரத்தை தொடங்கிவிட்ட நாம் தமிழர் தற்போது களத்திலும் மாயங்களை நிகழ்த்தி வருகிறது.

அதிலும் நேற்று சென்னையில் நாம் தமிழர் செய்த சில அறிவிப்புகள்அடஎன்று சொல்ல வைக்கும் அளவிற்கு தைரியமான முடிவுகள். சட்டசபை தேர்தலை முன்னிட்டு நேற்று நாம் தமிழர் கட்சி சார்பாக வேட்பாளர்கள் அறிவிப்பு வெளியானது.

சட்டசபை தேர்தலுக்கான 234 வேட்பாளர்களையும் நாம் தமிழர் கட்சி நேற்று அறிவித்தது. ராயப்பேட்டை ஒய்.எம்.சி. திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் 234 வேட்பாளர்களையும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிமுகம் செய்தார்.

234 வேட்பாளர்களில் 117 ஆண் வேட்பாளர்கள் ,117 பெண் வேட்பாளர்கள் நாம் தமிழர் சார்பாக சீமான் களமிறக்கப்பட்டுள்ளனர். இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் நாம் தமிழர் கட்சி கூட்டணி குறித்தெல்லாம் கவலையே படவில்லை.

அதிமுக, திமுகவோடு போனால் வாக்கு வங்கி உயரும் என்றெல்லாம் ஆசைப்படவில்லை. கூட்டணிக்கு சில கட்சிகள் அழைத்தும் கூட தில்லாக கூட்டணியே வேண்டாம் என்று சீமான் முடிவெடுத்துவிட்டார். “என்ன வேணா நடக்கட்டும். நான் தனியாத்தான் நிப்பேன் என்று சீமான் தனியாகவே நிற்க முடிவெடுத்துவிட்டார்.

தமிழகத்தில் இந்த முறை திமுக, அதிமுக இரண்டும் பெரிய கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இப்படிப்பட்ட நேரத்தில் தனியாக நின்றால் கட்சிக்கு ஆபத்து என்றெல்லாம் நாம் தமிழர் அச்சப்படவில்லை. அதிரடியாக களம் குதித்து.. நடப்பதை பார்த்துக்கொள்ளலாம் என்று துணிச்சலாக தனியாக நிற்க முடிவு செய்துள்ளது. அதிலும் ஒரே அடியாக 234 வேட்பாளர்களையும் சீமான் அறிவித்துவிட்டார்.

இதெல்லாம் போக சர்வதேச மகளிர் தினத்திற்கு முதல்நாள்.. சரியாக 50% பெண் வேட்பாளர்களை அறிவித்தது எல்லாம் மாஸ்டர்ஸ்டிரோக் என்றுதான் கூற வேண்டும். ஜெயிப்பார்களா இல்லையா என்று சந்தேகம் கொள்ளாமல் பெண்களுக்கான களத்தை அமைத்து கொடுத்ததற்கே இந்த முடிவை பாராட்ட வேண்டும். அதிமுக, திமுக போன்ற மூத்த கட்சிகளுக்கு நாம் தமிழர் இதன் மூலம் வலுவான மெசேஜ் ஒன்றையும் அனுப்பி உள்ளது.

நான் தனியாகத்தான் நிற்பேன். திராவிட கட்சிகளின் கூட்டணியோடு சேர மாட்டேன் என்பதை சீமான் உறுதியாக சொல்லாமல் சொல்லி இருக்கிறார். கட்சிக்கு எந்த விதத்தில் இந்த முடிவு உதவும் என்பதை தாண்டி நாம் தமிழர் கட்சியின் தனித்துவத்தை இது காக்க உதவும். வாக்குவங்கிக்கு ஆசைப்பட்டு பெரிய கட்சிகளோடு கூட்டணி வைத்து காணாமல் போன கட்சிகள் பல உள்ளன.

கூட்டணியில் இருந்து இருந்தே அடையாளம் தெரியாமல் போன கட்சிகள் இருக்கின்றன. அப்படி ஒரு அரசியல் தற்கொலை முடிவை நாம் தமிழர் எடுக்கவில்லை. தனியாக நிற்பது, பெண்களை களமிறக்குவது என்று ஆக்கபூர்வமான முடிவுகளை சீமான் இந்த முறையும் எடுத்துள்ளார். தேர்தலில் இது பயன் அளிக்குமா என்ற கேள்வியை தாண்டி நாம் தமிழர் கட்சியினர் இடையே இது கண்டிப்பாக புதிய உத்வேகத்தை கொடுக்கும்!

Translate »
error: Content is protected !!