*“சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சிக்கு பொதுச்சின்னம் ஒதுக்க முடியாது!” -தேர்தல் ஆணையம் தகவல்.,
*முதல்வேலையே ஜெயலலிதா மரணத்தை கண்டுபிடிப்பதுதான்” – ஸ்டாலின் பேச்சு.,
*சேலம் செவ்வாபேட்டையில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார் திமுக தலைவர் ஸடாலின்.,
*’ஒர்கவுட் ஆகுமா’.. பாஜக குறி வைத்துள்ள 10 தொகுதிகள்…! “உடனே தூக்கு.. உடனே சீட்”..
*அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க உத்தரவிட முடியாது. – சென்னை உயர்நீதிமன்றம்.,
*தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பதால் 2-வது அலை வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு மருத்துவர்களிடம் தகவல் தெரிவித்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.,
*வேளாண் துறைக்காக தனி பட்ஜெட் போடப்படும் என்றும், நெல் மற்றும் கரும்புக்கு கூடுதல் தொகை வழங்கப்படும் என்றும் திமுக தலைவர் திரு மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.,
*அரசுத்துறை வங்கிகளை மோடிக்கு ஆதரவான முதலாளிகளுக்கு மத்திய அரசு விற்பனை செய்வதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு விற்பதன் மூலம் இந்திய நிதி பாதுகாப்பை சீர்குலைப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இந்திய அரசாங்கம் லாபத்தை தனியார் மயமாக்குவதாகவும் நஷ்டத்தை தேசியமயமாக்குவதாகவும் ராகுல் கூறினார்.,
*திமுக ஆட்சி அமைந்தால் பூரண மதுவிலக்கை அமல்படுத்த காங்கிரஸ் கட்சி வலியுறுத்தும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ளார்.,
*சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார பாதுகாப்பே, நாட்டின் மேம்பாட்டுக்கான அடித்தளம் -குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த்.,
*மியான்மரில் மக்கள் கிளர்ச்சியை தடுத்து நிறுத்த 6 முக்கிய நகரங்களில் ராணுவ சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் பெரும் பதற்றம்!.,
*காங். தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்:,
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கண்ட கனவின்படி, உள்ளாட்சிகளுக்கு மீண்டும் அதிகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். திறமையும், வலிமையும், அர்ப்பணிப்பும் கொண்ட தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.,
*கொரோனா பரவல் அதிகரிப்பதால் ரயில்களை 100 சதவீதம் இயக்க உத்தரவிட முடியாது – சென்னை உயர் நீதிமன்றம்.,
*அதிகரிக்கும் கரோனா: முதல்வர்களோடு ஆலோசிக்கும் பிரதமர் இந்தியாவில் கரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் நாக்பூரில் ஒருவார காலத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.,
*”முக்குலத்தோர் சமுதாயத்திற்கு துரோகம் இழைத்த அதிமுகவை நிராகரித்து தோற்கடிக்க முக்குலத்தோர் புலிப்படை சபதமேற்றுள்ளது” – கருணாஸ்.,