தேர்தலில் பணப்பட்டுவாடா மற்றும் விதிமுறை மீறல்களை தடுக்க தனியார் விடுதிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்

தேர்தலில் பணப்பட்டுவாடா மற்றும் விதிமுறை மீறல்களை தடுக்கும் வகையில் தனியார் விடுதிகளுக்கு தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கோவையில் சில தங்கும் விடுதிகளில் உள்ள அறைகளை தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே சிலர் முன் பதிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த விவரங்களை தேர்தல் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை நகர் மற்றும் புறநகர் தனியார் தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்களுக்கு தேர்தல் பிரிவு சார்பில் அனுப்பப்பட்டுள்ள அறிவுறுத்தலில் கூறப்பட்டிருப்பதாவது;

விடுதியில் தினசரி தங்குவோர் பெயர், முகவரி சரிபார்க்கப்பட வேண்டும். ஒரே நபர் பலருக்கு அறைகளை முன்பதிவு செய்து உள்ளாரா? என்றும் கட்சிகள் சார்பில் அறைகள் பதிவு செய்யப்படுகிறதா? எனவும் கவனிக்க வேண்டும்.

ஒரு நபர் அல்லது கட்சி சார்பில் அதிக நாட்களுக்கு அறைகளை முன்பதிவு செய்தால் அந்த விவரங்களை தேர்தல் பிரிவினருக்கு தெரியப்படுத்த வேண்டும். விடுதிகளில் பணம் பொருட்களை வைத்து வாக்காளர்களுக்கு வழங்கும் நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது. திருமணமண்டபம், விழா கூடங்களில் கட்சியினரை தங்க வைக்கக்கூடாது.

தேர்தல் நடத்தை விதிகளின்படி தங்கும் விடுதிகள் செயல்பட வேண்டும். ஓட்டுப்பதிவு நாள் மற்றும் அதற்கு முந்தைய நாட்களில் வெளியூரிலிருந்து வரும் நபர்களை கோவை மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட தங்கும் விடுதிகளில் தங்குவதற்கு அனுமதிக்கக்கூடாது. ஓட்டுப்பதிவு பாதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாதுஇவ்வாறு தேர்தல் பிரிவு அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!