நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்காக நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று மாலை வெளியாகின.
மருத்துவப்படிப்புகளில் சேர, நீட் பொதுத்தேர்வு எழுதுவது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மாதம் 13ம் தேதி நடைபெற்றது.
கொரொனா பாதிப்பு காரணமாக இம்முறை நீட் தேர்வு தாமதமாக நடைபெற்றது. இதில், 3 ஆயிரத்து 862 மையங்களில், ஏறத்தாழ 13 லட்சத்து 52 ஆயிரம் பேர் நீட் தேர்வு எழுதியிருந்தனர். தமிழகத்தை பொருத்தவரை, ஒரு லட்சத்து 17 ஆயிரம் பேர் நீட் தேர்வை எழுதினர்.
இந்த சூழலில், நீட் தேர்வு முடிவுகள் இன்று மாலை 5:30 மணியளவில் தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை nta.ac.in மற்றும் ntaneet.nic.in ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.