“ஜஸ்ட் மிஸ்”. அதிமுகவின் மிகப்பெரிய தவறு.. திமுகவுக்கு “தீயாய்” உதவும் தினகரன்.. காரணம் இதுதான்!

சென்னை,

அதிமுக தெரிந்தே இந்த தவறை செய்துவிட்டதா? அல்லது திக்கு தெரியாமல் கூட்டணி வைத்து சிக்கி கொண்டு விட்டதா என்று தெரியவில்லை. அதிமுகவின் வெற்றிக்கு அமமுக மிகப்பெரிய தடையாக உருவெடுத்துள்ளது.

தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி வந்துகொண்டிருக்கின்றன.. இதில் தொடர்ந்து நாம் கவனித்து வரும் விஷயம், அமமுகவின் வளர்ச்சிதான்.. அந்த வகையில், தென்மண்டலங்களின் பல இடங்களில் அதிமுகவுக்கு அமமுக ஒரு தலைவலியாக உருவெடுத்துள்ளது. இது அதிமுகவுக்கு சறுக்கலை தந்து திமுகவின் வெற்றிக்கு வழிவகுத்து வருகிறது.

2019 தேர்தலில் சில இடங்களிலேயே அமமுக இந்த அதிர்வை மறைமுகமாக ஏற்படுத்தியது.. அது எம்பி தேர்தல் என்பதால் அதன் வீரியம் அவ்வளவாக தெரியவில்லை. இது சட்டமன்ற தேர்தல் என்பதால், ஒவ்வொன்றும் வெளிப்படையாகவே வாய்ப்பு உள்ளது. இதற்கு காரணம், டிடிவி தினகரன் தன் கட்சிக்கான அதே வாக்கு வங்கியை அப்படியே வைத்திருக்கிறார் என்பதும் உண்மை.

இந்த முறைகூட அமமுக அதிமுகவின் வாக்குகளை பெருமளவு பிரிக்கக்கூடிய சக்தியாக உருவெடுத்துள்ளது.. இது வாக்கு வங்கி விகிதத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், அதிமுகவின் அசுர வளர்ச்சியை அது பாதித்துவிடும் என்று தெரிகிறது. இதனால், பாரம்பரியம் தழைத்த அதிமுகவுக்கும் ஒரு டேமேஜை அமமுக ஏற்படுத்தும் என்பதும் உறுதியகிறது.

அமமுக தோற்பது, வெற்றி பெறுவது என்பது 2வது விஷயம்.. ஆனால், டிடிவி தினகரன் எடப்பாடியாருக்கு ஒரு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளார் என்பதே இந்த கணிப்புகள் நமக்கு காட்டும் உதாரணங்கள். சசிகலா தயவு இல்லாமலேயே, சொந்த செல்வாக்குடன், சமூக செல்வாக்கை தினகரன் தனித்தே பெற்று வந்துள்ளார் என்பதும் நிரூபணமாகி வருகிறது.

இத்துடன் தமிழகம் முபவதும் பரவலான ஓட்டு வங்கி உள்ள தேமுதிகவின் ஆதரவும் சேர்ந்து கிடைப்பதால், தினகரனின் வளர்ச்சி என்பது இந்த தேர்தலில் அபாரமாக இருக்கும் என்றே அரசியல் வல்லுநர்களும் கணிக்கிறார்கள்.

இதுதான் நேற்றைய சத்தியம் டிவியின் கருத்து கணிப்பிலும் வெளிப்பட்டது.. அதிமுகவின் பெருவாரியான வெற்றியை அமமுக தடுத்திருக்கிறது அமமுகவை என்றால், இது அதிமுக செய்த மிகப்பெரிய தவறு, அமமுக மட்டுமல்ல, தேமுதிகவையும் விட்டுவிடாமல் இழுத்து பிடித்து வைத்திருக்க வேண்டும். தேமுதிகவை விட அமமுகதான் அதிமுகவின் வெற்றி வாய்ப்பை பெருமளவில் தடுக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளது.

கட்சிக்குள் சசிகலாவுக்கு இடமில்லை என்று சொல்லிவிட்டது, உட்கட்சி பிரச்சனை என்றே வைத்து கொண்டாலும், ஓபிஎஸ்இபிஎஸ் இருவரும் மட்டுமே சம்பந்தப்பட்டு முடிவெடுக்க வேண்டியது என்று வைத்து கொண்டாலும், கூட்டணி என்று பார்த்தால், அதை பலப்படுத்த வேண்டியது அதிமுக தலைமை தவறிவிட்டது என்பதே உண்மை. அமமுகவுடன் கூட்டணி வைத்திருக்கலாம்.. தென்மண்டலங்களை பற்றியும் கவலை இல்லாமல் இருந்திருக்கலாம்.

அதேதான் தேமுதிகவுக்கும்.. விஜயகாந்த்தை எக்காரணம் கொண்டும் கைவிட்டிருக்க கூடாது. இவ்வளவு கெடுபிடிகளும் காட்டியிருக்க கூடாது.. அவங்களுக்கு ஓட்டு வங்கி இருக்கா, இல்லையா என்பது வேறு விஷயம்.. ஆனால், அவர்களுக்கு எந்த அளவுக்கு வாக்கு வங்கி இருக்கிறதோ, அதைவிட அதிகமாக அதிமுகமீது வெறுப்பு ஓட்டுக்கள் வந்துவிடும் என்பதைதான் இந்த கருத்து கணிப்புகள் காட்டி வருகின்றன. இத்தனை வருடம் கூடவே இருந்தவர்கள் மீது இந்த அளவுக்கு கறார் காட்ட வேண்டுமா?

பாஜகவைவிட தமிழகம் முழுக்க பரவலாக தேமுதிகவுக்கு இருக்கும் மதிப்பை பற்றி யோசித்திருக்க வேண்டாமா? என்பன போன்ற கேள்விகளும் அதிமுக மீது நமக்கு எழுகின்றன. திமுகவைவிட பலம் முறைந்த கூட்டணியாக அதிமுக உள்ளதும், அமமுக என்ற ஒத்த கட்சியின் விஸ்வரூபத்தை அதிமுகவால் தடுக்க முடியாமல் போனதும், திமுகவின் ஆகப்பெரும் பலமாக சேர்ந்துள்ளது.

அமமுக வெற்றி பெறுகிறதோ இல்லையோ, இது திமுகவின் வெற்றிக்கு வழிவிட்டுள்ளது.. போட்டியே இன்றி திமுக பல இடங்களில் அபார வெற்றி பெறும் சூழலையும் அமமுக மறைமுகமாக ஏற்படுததி விட்டு வருகிறது.. இது தேர்தலுடன் முடியாது.. அமமுகவின் தாக்கமானது, தேர்தலுக்குப் பின்னர் அசுரபலம் பெறும் என்றும் தெரிகிறது.. அதாவது சசிகலா தலைமையில் அதிமுகஅமமுக இணையும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளனஅமமுக கூட்டணியானது, அதிமுக கூட்டணிக்கு குடைச்சல் தர ஆரம்பித்துவிட்டது. சுருக்கமாக சொல்லப்போனால், யானை காதில் எறும்பு ஏறுமே.. அந்த மாதிரி…!

Translate »
error: Content is protected !!