கோவையில் நேரடியாக களம் இறங்கி போராட்டம் நடத்திய விகாஷ் வேலுமணி

கோவை சுகுணாபுரம் பகுதியில் அதிமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மகன் விகாஷ் நேரடியாக களம் இறங்கி தலைமை ஏற்று போராட்டம் நடத்தினார்.

அப்போது அவர் பேசுகையில், ”  தமிழக முதல்வரின் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் வாயில் சொல்ல அருவருக்கத்தக்க வார்த்தைகளை பயன்படுத்தி திமுக நிர்வாகி பேசியுள்ளார். இது தமிழக மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆயிரம் கருணாநிதி வந்தால் கூட  தமிழக முதல்வரின் தாய் தவுசாயம்மாளுக்கு ஈடாக முடியாது.

தன் மகனை தன்மானம் மிக்கவராக, நல்லவராக, மக்களுக்கு உதவும் குணம் உள்ளவராக, பாடுபட்டு உழைக்கும் விவசாயியாக மாற்றியிருக்கிறார். அப்படிப்பட்ட பெருமை மிக்க தாயாரை  இழிவுபடுத்தி பேசியிருப்பது ஏற்கத்தக்கதல்ல. முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒரு மகனை ரவுடியாகவும் மற்றொரு மகனை  தத்தி யாகவும் வளர்த்துள்ளார்.

பெற்ற மகனை யார் என சொல்லாமல் மறைத்து காட்டியிருக்கிறார். தாய்மார்களை இழிவு படுத்தும் செயலை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்,” என்றார். முன்னதாக போராட்டத்தின் போது திமுக நிர்வாகியின் உருவ படத்தை அதிமுகவினர் தீ வைத்து எரித்தும் செருப்பு மற்றும் துடைப்பத்தால் அடித்தும் எதிர்ப்பு காட்டினர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. யாரும் எதிர்பாராத வகையில் கட்சி நிகழ்வுகள் எதிலும் பங்கேற்காத அமைச்சர் எஸ்.பி வேலுமணி  மகன் விகாஷ் முதல்வரின் தாயாரை இழிவுபடுத்திய செயலால் கொந்தளித்து அதிரடியாக களத்தில் இறங்கிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அமைச்சரின் அடுத்த வாரிசாக இவர் கோவை மாவட்டத்தில் களமிறங்கி பணியாற்றுவார் என அதிமுக வட்டாரம் எதிர்பார்த்துள்ளது.

குறிப்பாக விகாசின் பேச்சு இளைஞர்கள் மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இவரின் முதல் போராட்டமே வாட்ஸ்அப் பேஸ்புக் உள்ளிட்ட சோசியல் மீடியாக்களில் வைரல் ஆகி விட்டது. இவர் தொண்டாமுத்தூர் தொகுதியில் களம் இறங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டால் இளைஞர்கள் ஓட்டுக்கள் குவியும் என அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Translate »
error: Content is protected !!