ஜெயலலிதா அம்மாவை மறந்தவர் ஓபிஎஸ்… உங்களை எப்படி ஞாபகம் வைத்துக் கொள்வார் – திமுக வேட்பாளர் சரவணக்குமார் ஆதரித்து கனிமொழி வாக்கு சேகரிப்பு

ஜெயலலிதா அம்மாவை மறந்தவர் துணை முதல்வர் ஓபிஎஸ்  உங்களை எப்படி ஞாபகம் வைத்துக் கொள்வார்.

தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தில் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும்.. அரசு பணிகள் அனைத்தும் தமிழர்களுக்கே என வாக்குறுதி கொடுத்து திமுக வேட்பாளர் சரவணக்குமார் ஆதரித்து திமுக மகளிர் அணி தலைவர் கனிமொழி வாக்கு சேகரிப்பு.

தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தனி தொகுதி திமுக வேட்பாளர் சரவணக்குமாரரை ஆதரித்து திமுக மகளிர் அணி மாநில தலைவர் கனிமொழி எம்பி.. பெரியகுளம் காந்தி சிலை அருகே பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய போது இந்த மாவட்டத்தில் உங்களுக்கு துணை முதலமைச்சர் இருக்கிறார்.. அவர் நினைத்தால் உங்களுக்கு அனைத்தையும் செஞ்சு தரமுடியும் ஆனால் எதுவும் செய்யவில்லை.. லட்சுமிபுரத்தில் 200 அடி ஆழத்திற்கு கிணறு வெட்டி அந்த தண்ணீரை எடுத்து அவரே பயண்படுத்தி வருகின்றார். அம்மா இறப்பில் மர்மம் உள்ளது என ஓபிஎஸ் தர்ம யுத்தம் நடத்தினார். வாங்க உங்களுக்கு துணை முதலமைச்சர் பதிவு தர்ரேன் என்று சொன்னவுடனே அம்மாவை மறந்து விட்டார். அம்மா இறப்பு பற்றி விசாரணை கமிஷன் 9 அழைத்தும் ஒரு தடவை கூட இவர் விசாரணைக்கு செல்லவில்லை.

ஒரு கட்சி தலைவியே மறந்த ஓபிஎஸ் உங்களை எப்படி ஞாபகம் வைத்துக் கொள்வார். தலைவர் கலைஞர் எப்படி விவசாய கடனை ரத்து செய்தாரோ அதே போல் தளபதி ஸ்டாலின் அவர்கள் விவசாய கடனை ரத்து செய்வேன் என்று கூறியுள்ளார்மகளிர்களுக்கு சுய உதவிக் குழு அமைக்கப்பட்டது போல் ஆண்களுக்கும் இளைஞர்களுக்கும் சுய உதவிக் குழு அமைக்கப்படும்.

படித்துள்ள இளைஞர்களுக்கு இந்த ஆட்சியில் எந்த வேலை வாய்ப்புகளும் கொண்டுவரவில்லை.. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திதரப்படும். இந்த ஆட்சியில் உள்ளவர்கள் இங்குள்ள இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய மூன்று லட்ச வேலைவாய்ப்பை சட்டத்தின் மூலம் மாற்றி விட்டார்கள்.. தளபதி ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தில் புதியதாக சட்ட திருத்த கொண்டு வரப்பட்டு தமிழகத்தில் உள்ள வேலை வாய்ப்புக்கள்.. அனைத்து தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் வகையில் சட்டம் இயற்றப்படும்.

100 நாள் வேலைவாய்ப்பு 180 நாள் ஆக மாற்றப்படும் அதேபோல் இவர்களுக்கான சம்பளம் 200 – 300ரூபாயாக உயர்த்தப்படும். தளபதி ஆட்சி வந்தவுடன் எல்லா முயற்சிகளையும் செய்து கொண்டும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். கொரோனா காலத்தில் மக்களுக்கு 5,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்ஆனால் ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள் தளபதி ஆட்சிக்கு வந்தவுடன் தலைவரின் பிறந்த நாளன்று மீதம் 4000 ரூபாய் உங்களுக்கு வழங்கப்படும்.

நம்முடைய தேனி மாவட்டத்தில் குறிப்பாக பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு தேவையான கோரிக்கைகளை நிறைவேற்றித் தர உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து சரணவகுமாரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என  பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பிரச்சாரம் முடிந்த பின்பு அங்கு கட்சி நிர்வாகி தம்பதியற்கு பிறந்த ஆண் குழந்தைக்கு தளபதி என பெயர் சூட்டினர்.

Translate »
error: Content is protected !!