ஓட்டு போடாதவரா நீங்கள்? உஷார்!.. தேர்தல் ஆணையம் வைக்கும் புது செக்..!

கடந்த இரண்டு தேர்தல்களாக (2016 & 2019) வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துகொண்டே வருவதால் அதிரடி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. அதிலும் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் பரிசோதனை முயற்சியாக குறிப்பிட்ட 10 தொகுதிகளில் அமல்படுத்த இருப்பதாக தலைமை தேர்தல் ஆணையர்  தெரிவித்துள்ளார்.

அதன்படி வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் வாக்குப்பதிவு செய்யாத வாக்காளர்களின் பட்டியலை தயாரித்து, அடுத்த 15 நாட்களுக்குள் அந்தந்த தொகுதி தேர்தல் அதிகாரிகள் தலைமை தேர்தல் அதிகாரிக்கு சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு தயார் செய்யப்பட்ட வாக்களிக்காதோர் பட்டியலை அந்தந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, மின் வாரியம், பதிவுத்துறை அலுவலகம் மூலமாக இரட்டிப்பு வரிவசூல் மற்றும் கட்டண முறை அல்லது அபராத கட்டணம் போன்றவை அமல்படுத்த ஆணை வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஒரு பொதுநல வழக்கின் விசாரணையில் இது சம்பந்தமாக பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். அதனடிப்படையில் கடந்த 2019-ம்  ஆண்டு தேர்தலில் வாக்களிக்காதோர் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதில் நகர்ப்புறங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் படித்தவர்கள் மத்தியில் வாக்களிக்கும் ஆர்வம் குறைவாக இருப்பது தெரியவந்தது. எனவே, இம்முறை 100% வாக்களிப்பதை உறுதி செய்ய அதிக நகர்ப்புற வாக்காளர்களைக் கொண்ட தாம்பரம், பல்லாவரம், வேளச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகளில் இதை செயல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.

மேற்கொண்டு அடுத்தடுத்த தேர்தல்களில் நாடு முழுவதும் இத்திட்டம் அமல்படுத்த இருப்பதாக தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வாக்கு சதவீதம் குறைவான பகுதிகளில், வாக்களிக்காதோர் பட்டியல் உதவியுடன் வீடுவீடாக சென்று வாக்களிக்காத நபர்களுக்கு மட்டும் ஏற்கனவே கட்டிவரும் சொத்து வரி, குடிநீர் வரி, மின் கட்டணம், கிரய பதிவு கட்டணம் உள்ளிட்டவைகளை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இரட்டிப்பாக செலுத்தும் உத்தரவு ஆணையை நடைமுறைப்படுத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.

மேலும் தற்காலிக அல்லது வாடகை வீட்டில் குடிருப்போருக்கு சிறப்பு அபராதமும் விதிக்க அந்தந்த நகராட்சி உள்ளிட்ட துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் அட்டை ரத்து செய்யவும் பரிசீலிக்கப்படுகிறது. இச்சட்டம் ஏற்கனவே குஜராத்தில் `கட்டாய வாக்களிக்கும் சட்டம்` என 2009 முதல் அமலில் இருந்து வருவதாலும், நீதிமன்றத்தின் நேரடி உத்தரவின் பேரில் செயல்படுத்த இருப்பதாலும் தமிழகம் முழுவதுமாக இச்சட்டம் அடுத்த தேர்தலுக்கு முன் அமல்படுத்தப்படும். வாக்காளர்களே, மறக்காமல் இம்முறை வாக்களியுங்கள். தேவையில்லாமல் அபராதங்களோ கூடுதல் வரியோ செலுத்தி அவதிப்படாதீர்கள்

Translate »
error: Content is protected !!