தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த தேர்தலை விட வாக்குப்பதிவு சதவீதம் குறைவு… இதுவா காரணம்..!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த தேர்தலை விட வாக்குப்பதிவு சதவீதம் குறைந்து உள்ளது. கொரோனா தொற்று காரணமாக வாக்குப்பதிவு சரிந்து இருக்கலாம் என கூறப்படுகிறது..

சட்டமன்ற தேர்தல்::

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது. வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை முதலே விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு இரவு வரை நீடித்தது.

மாவட்டம் முழுவதும் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 11.61 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்த தேர்தலில் காலை 9 மணிக்கு 10.79 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.

குறைவு::

11 மணிக்கு கடந்த தேர்தலில் 25.45 சதவீதமும், தற்போது 25.07 சதவீதமும், 1 மணிக்கு கடந்த தேர்தலில் 48.57 சதவீதமும், தற்போது 40.50 சதவீதமும், 3 மணிக்கு கடந்த தேர்தலில் 59.89 சதவீதமும், தற்போது 52.54 சதவீதமும், மாலை 5 மணிக்கு கடந்த தேர்தலில் 66.84 சதவீதமும், தற்போது, 63.76 சதவீதம் வாக்குகளும் பதிவாகி உள்ளன.

கடந்த தேர்தலை ஒப்பிடும் போது, தற்போது வாக்குப்பதிவு சதவீதம் வெகுவாக குறைந்து உள்ளது. கொரோனா தொற்று காரணமாக இந்த வாக்குப்பதிவு சதவீதம் குறைந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Translate »
error: Content is protected !!