காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று முதல் டிவி மற்றும் யூடியூப் சேனல் தொடங்க திட்டம்

காங்கிரஸ் கட்சி சார்பில் டிவி மற்றும் யூடியூப் சேனல்கள் இன்று தொடங்கப்பட உள்ளது. இந்த சேனல்கள் மூலம் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மற்றும் காங்கிரஸ் கட்சி தெரிவிக்கும் தகவல்கள், கருத்துக்களை பொதுமக்களுக்கு நேரடியாக கொண்டு சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

.என்.சி. டிவிஎன பெயரிடப்பட்டுள்ள அந்த சேனலின் துவக்க நிகழ்ச்சி இன்று காலை 11.30 மணிக்கு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சின் தலைவர்கள் மல்லிகர்ஜூனகார்கே, ரந்தீப் சுர்ஜீவாலா, சுஷ்மிதா தேவ், சீனிவாஸ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் தொடங்கப்படும் டிவி சேனல் மற்றும் யூடியூப் சேனல் அக்கட்சியின் கருத்துக்களை நாடு முழுவதும் கொண்டுசேர்க்க உறுதுணையாக இருக்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!