மே 2ல் முழு ஊரடங்கு தேவையில்லை – கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. இந்த சூழலில் கேரள மாநிலத்தில் வாக்கு எண்ணும் நாளில் ஊரடங்கு பிறப்பிக்கக் கோரி, கோட்டயத்தைச் சேர்ந்த வழக்கறிஞர், கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதுதொடர்பான விசாரணையில், மே 2 மற்றும் 3ம் தேதிகளில் வாக்கு எண்ணிக்கை கொண்டாட்டங்களுக்கு தடைவிதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக, அரசுத் தரப்பு வாதிட்டதுவாக்கு எண்ணும் நாளில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வழங்கப் பட்டுள்ளதாகவும், வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மாநில அரசும், தேர்தல் ஆணையமும் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக உள்ளதால், நீதிமன்றம் தனியாக உத்தரவு பிறக்க தேவையில்லை என தீர்ப்பளித்தனர்.

Translate »
error: Content is protected !!