ஆம்புலன்ஸ் சேவைகளில் பணியாற்றிய 30 ஓட்டுனர்களுக்கு கொரோனா பாதிப்பு

சத்பவனா ஆம்புலன்ஸ் சேவைகளில் பணியாற்றிய 30 ஓட்டுனர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மூன்று ஓட்டுனர்கள் கொரோனா பாதிப்பால் மரணமடைந்தனர்.

இது குறித்து சத்பவனா அம்புலன்ஸ் சேவைகளின் நிறுவனர் அணில் சிங் கூறுகையில், 90% ஓட்டுநர்கள் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்தார். தங்கள் வேலைக்கு அர்ப்பணித்த நல்ல மனிதர்களை இழந்து விட்டோம் என வேதனை தெரிவித்த அவர், புதிதாக யாரும் ஓட்டுநர் வேலைக்கு வருவதில்லை என்றார்.

ஆக்சிஜன் தேவை அதிகமாக உள்ளதால் பல ஓட்டுநர்கள் ஆக்சிஜன் நிரப்பும் மையத்திற்கு வெளியே பல மணி நேரம் காத்து கிடக்கின்றனர். ஆக்சிஜன் இல்லாததால் 22 ஆம்புலன்ஸ் வேலையின்றி கிடப்பதாக அணில் சிங் தெரிவித்தார். கொரோனா ஒருபுறம் கோர தாண்டவம் ஆடும் நிலையில், ஆம்புலன்ஸ் பற்றாக்குறை மறுபுறம் டெல்லியை ஆட்டிபடைத்து வருகிறது.

Translate »
error: Content is protected !!