எதிர்கட்சி தலைவர் யார் என்பதை எம் எல் ஏக்கள் – ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் கூடி முடிவெடுப்பார்கள். சேலத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி பேட்டி அளித்துளார்.
சேலத்தில் தங்கி உள்ள முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமியை இன்று காலை முன்னாள் அமைச்சர் வளர்மதி நேரில் சந்தித்து சிறிது நேரம் பேசினார் .
பின்னர் வளர்மதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
அரசியல் கட்சிகளுக்கு தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம். தோல்வியை எதிர்கொள்ளக் கூடிய மன தைரியம் அதிமுகவில் அனைவருக்கும் உண்டு. எதிர்கட்சி தலைவர் யார் என்பதை எம் எல் ஏக்கள் – ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் கூடி முடிவெடுப்பார்கள்.
சுத்தமாக கீழே விழுந்துவிடும் என்று பலர் கூறிய நிலையில் அதிமுகவின் முடிவுகள் எடப்பாடி பழனிசாமியின் அயராத உழைப்பு ஆளுமையை காட்டுகிறது. இவ்வாறு முன்னாள் அமைச்சர் வளர்மதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். முதலமைச்சரை முன்னாள் அமைச்சர் உதயகுமாரும் நேரில் சந்தித்தார்.