தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆலோசனைகள் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள 13 கட்சிகளுக்கும் அந்தக் குழுவில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் மருத்துவர் எழிலன் மற்றும் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.