பாகிஸ்தானில் பயங்கர குண்டு வெடிப்பு: 7 பேர் உயிரிழப்பு; 80 பேர் படுகாயம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் மாணவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்; 80 பேர் பலத்த காயமடைந்தனர்.

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் பெஷாவர் நகரில் உள்ள இஸ்லாமியப் பள்ளி ஒன்றின் அருகே இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக பாகிஸ்தான் போலீசார் தெரிவித்தனர்.

இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் மாணவர்கள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார்கள். 80க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, லேடி ரீடிங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் பாகிஸ்தான் போலீசார், பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததை கண்டறிந்துள்ளனர்.

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல், அரசுக்கு எதிராக பலுசிஸ்தான் மாகாணத்தின் கவுட்டா நகரில் பிரிவினைவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தக் குண்டு வெடிப்பு அவர்களின் வேலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Translate »
error: Content is protected !!