இந்த ஆண்டு பொறியியல் பாடங்களை தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் கற்க மத்திய தொழில் கல்வித்துறை அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய தொழிற்கல்வித்துறை தரப்பில் கூறப்படுள்ளதாவது, ‘‘ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், இந்தி, மராத்தி, வங்காளம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி ஆகிய 8 மொழிகளில் பொறியியல் கல்லூரிகள் பாடத்திட்டங்களை வழங்கலாம்.
இதன் மூலம் ஆங்கில குறைபாடு உடைய கிராமப்புற மற்றும் பழங்குடியின மக்கள் தங்கள் பிராந்திய மொழியில் பொறியியல் படிப்பை படிக்க இயலும். பலர் அச்சம் காரணமாக பொறியியல் படிப்பை ஏற்க மறுக்கும் சூழலையும் இது மாற்றியமைக்கும். பாடத்திட்டங்களை 22 மொழிகளில் மொழி பெயர்ப்பதற்கான புதிய மென்பொருள் ஒன்றையும் தொழில் கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது’’.