மத்திய உள்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
டெல்லி,
அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். பின்னர் சிகிச்சை பெற்று கொரோனாவில் இருந்து மீண்டார். இதனால் தொடர்ந்து பணியில் ஈடுபட தொடங்கினார்.
இந்நிலையில் இன்று திடீரென உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்றுக்கு பிந்தைய பாதிப்பால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.