புனேயிலிருந்து 4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் நேற்று விமானம் மூலம் சென்னைக்கு வந்தன. இதனால் இன்று முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் பற்றாக்குறை காரணமாக ஏப்ரல் 5ம் தேதி வரை தடுப்பூசி போடுவதில் சிக்கல் ஏற்பட்டது. நேற்று மாலை, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசுகையில், ‘விமானத்தில் 4,20,570 டோஸ் தடுப்பூசிகள் சென்னைக்கு வந்துள்ளதால் நாளை முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் தொடர்ந்து போடப்படும். தடுப்பூசிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் உடனடியாக அனுப்பிவைக்கப்படும்’. இவ்வாறு தெரிவித்தார்.